உதயநிதி நடித்துள்ள ‘கெத்து’.ஆல்பம்!
திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் ‘கெத்து’. எமிஜாக்சன், கருணாகரன், சத்யராஜ், விக்ராந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக் கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
இதில் கருணாகரன் பேசும்போது, இயக்குனர் திருகுமரன் பேசும்போது, ‘நான் இயக்கிய மான் கராத்தே படத்தில் உதயநிதிதான் நடிக்க வேண்டியிருந்தது. பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அடுத்ததாக ‘கெத்து’ படத்தின் கதையை உருவாக்கிய பின்பு உதயநிதிதான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நடிக்க வைத்துள்ளேன். ஒரு சண்டைக்காட்சியில் உதயநிதி ஒரே டேக்கில் நடித்து முடித்தார். உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். ஸ்டைலிஷான வில்லனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். முதலில் எமி ஜாக்சனுக்கு தமிழில் வசனம் சொல்ல கஷ்டப்பட்டேன். பின்னர் நாளடைவில் தமிழில் சொன்னால் கூட புரிந்துக் கொண்டார்’ என்றார்.











