இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முடிவு- கனடா பிரதமர் அறிவிப்பு

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முடிவு- கனடா பிரதமர் அறிவிப்பு

இலங்கையில் அடுத்தமாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். கனடாவில் வசிக்கும் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் இலங்கையில் நடந்த போரில் மனித உரிமை மீறலால் இம்மாநாட்டை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
8 - canada prime minister
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு அங்கு அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், அதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையும், சிறையில் அடைப்பதும் நடைபெறுகிறது. சிறுபான்மையினரான தமிழர்கள் மீது வன்முறை, காணாமல் போனதாகவும், நீதிக்கு அப்பாற்பட்டு கொலை செய்வதாகவும் வரும் புகார்கள் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்’ என்று அவர் கூறியுள்ளார்.

Canada to boycott Sri Lanka Commonwealth meeting
******************************************************************
Prime Minister Stephen Harper will boycott the upcoming Commonwealth meeting in Sri Lanka because of human rights concerns in that country.Harper made the announcement late Sunday in Bali, Indonesia, where he was attending the Asia Pacific Economic Co-operation Summit.

error: Content is protected !!