32°C
விளம்பரம்
Advertisement

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி இனி ஆன்லைனில் மட்டும்தான் கிடைக்கும்- நோ புத்தகம்

admin சேலம் Published: April 22, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




உலகின் பிரபலமான ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி இனி புத்தகமாக கிடைக்காது. அதை ஆன் லைனிலேயே வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டு அகராதி ஒவ்வொரு கால இடைவெளியிலும் புதிய புதிய வார்த்தைகளை சேர்த்து புதிய பதிப்புகளாக வெளியிடப்படுகிறது. இதனால் அகராதியின் பக்கங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அடுத்த புதிய பதிப்பு குறித்து ஆலோசனை நடத்திய போது, ஏராளமான புதிய சொற்களை சேர்க்க வேண்டி அவசியம் ஏற்பட்டது. அப்படி புத்தகமாக வெளியிட்டால் பக்கங்கள் எக்கச்சக்கமாக அதிகரித்து விடும். அவ்வளவு பெரிய புத்தகத்தை அச்சடிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என ஆக்ஸ்போர்டு அகராதி பதிப்பக நிறுவனம் தெரிவித்துள்ளது.
oxford-english-dictionary
இதுகுறித்து அந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள செய்தியில், ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிய வார்த்தைகளின் சேர்க்கை காரணமாக அதன் பக்கங்கள் மிகவும் அதிகரித்து விட்டன. எனவே எதிர்காலங்களில் இவற்றை அச்சில் கொண்டுவர முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இவற்றை தொடர்ந்து ஆன்லைனிலேயே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து இதன் ஆசிரியர் மைக்கேல் புரோவிட் கூறுகையில், தற்போதைய புதிய பதிப்பு தயார் செய்யப்பட்டு வருகிறது. அனேகமாக அது 2034ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ஆன் லைனில் வெளியிடவே திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வளவு பெரிய சைசில் புத்தகத்தை அச்சடிக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்