தமிழ் குரல் / AI Voice
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் லயோலா கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் என 400 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

அதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறி யதாவது:-”இந்த கருத்துக்கணிப்பு தமிழகம் முழுவதும் 28 மாவட்டங் களில் நடத்தப்பட்டது. 3370 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டார்கள். ஆண்களும், பெண்களும் இந்த கருத்துக்கணிப்பில் சம அளவில் கலந்து கொண்டார்கள்.அதிமுகவின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக 65 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் பொருட்கள் ஒழுங்கான முறையில் வினியோகம் செய்யப்படுவதாக 63.9 சதவீதத்தினரும், நலத்திட்டம் செயலாக்கம் குறித்து 51.9 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் சிறப்பாக இருப்பதாக 49.8 % பேரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதிமுக அரசின் திட்டங்களான விலையில்லா பொருட்களுக்கு 89 சதவீதத்தினரும், திருமண உதவி திட்டத்திற்கு 73.6 சதவீதத்தினரும், விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு 72.8 சதவீதத்தினரும், முதியோர் உதவித் திட்டத்திற்கு 69.7 சதவீதத்தினரும், அம்மா உணவகத்திற்கு 56.2 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யார் முதலமைச்சராக வரவேண்டும் என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டதில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக 31.56% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலினுக்கு 27.98% பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு 21.33% சதவீதத்தினர்தான் ஆதரவு தெரிவித் துள்ளனர்.இதனால் கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கு சரிந்துள்ளது விஜயகாந்துக்கு 6.24 சதவீதத்தினரும், அன்புமணிக்கு 2.27 சதவீதத்தினம் வைகோவுக்கு 1.85% பேரும், சீமானுக்கு 1.84% பேரும்,திருமாவளவனுக்கு 1.13% பேரும், ஜி.கே வாசனுக்கு 1% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
வரும் 2016 சட்ட பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்பது பற்றிய கருத்து கணிப்பு வருமாறு:-
அதிமுக – 34.1%
திமுக – 32.6%
தேமுதிக – 4%
பாமக – 3%
பிஜேபி – 2.9%
காங்கிரஸ் – 1.6%
12.8 சதவீதத்தினர் கருத்து கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். யாருக்கும் ஓட்டு இல்லை என்று 3.8 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய கட்சிகள் என்று எவையெவை என்ற கருத்துக் கணிப்பு முடிவு வருமாறு:-
அதிமுக – 23.9%
திமுக – 19.3%
தேமுதிக – 4.6%
பாமக – 2.4%
பிஜேபி – 1.9%
எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறியவர்கள் 26.6%.
-என்று ராஜநாயகம் கூறினார்.
