வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நெருங்குது!

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நெருங்குது!

ருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ந்தேதி, இதற்கு மேல் கால நீட்டிப்பு இம்முறை வழங்கப்படாது என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 – 22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு நாள்களே உள்ளது. அதற்குள் மக்கள் தங்கள் வருமான வரியை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். ஜூலை 31-க்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது. ஜூலை 25 வரை 3 கோடி மக்கள் வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

2020 – 21-ம் நிதியாண்டில் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் சுமார் 5.89 கோடி வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. கடைசி நாளில் மட்டும் 9 லிருந்து 10 சதவிகித வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதாவது, 50 லட்சம் வருமான வரி தாக்கல் பதிவுகள் அந்த ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முறை 1 கோடி பதிவுக்கு தயாராக இருங்கள் என மக்களிடம் சொல்லி இருக்கிறேன் என வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். போன முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதைப் போன்று இந்த ஆண்டும் மக்கள் நீட்டிக்கப்படும் என மெத்தனமாக இருக்கக் கூடாது. இம்முறை கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!