மோடி அரசின் கடைசி பட்ஜெட்: முழு விபரம்!

மோடி அரசின் கடைசி பட்ஜெட்: முழு விபரம்!

ந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாஜக மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதற்கு மோடி அரசின் பட்ஜெட் ஒரு சான்று என்றும், இது நாட்டை மனதில் கொள்ளாமல் தேர்தலை மட்டும் மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளார். அது போல் ‘மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது’ என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாட்டின் 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இந்த பட்ஜெட்டைஉருவாக்கி உள்ளது. மத்திய நிதித் துறை செயலர் டிவி சோமநாதன் (தமிழ்நாட்சை சேர்ந்தவர்), பொருளாதார விவகார துறை செயலர் அஜய் சேத், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துகின் கந்தா பாண்டே, வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதி சேவைகள் துறை செயலர் விவேக் ஜோஷி, தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் இந்தப் பட்ஜெட் உருவாக்கத்தில் பங்கு வகித்துள்ளனர். பட்ஜெட் செயலி: பட்ஜெட் உரை முடிந்த பிறகு, பட்ஜெட் ஆவணம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இணையத்தில் பதிவேற்றப்படும். ‘Union Budget Mobile App’ என்ற செயலி மூலம் பட்ஜெட் ஆவணத்தை வாசிக்க முடியும்.

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் ஹைலைட்ஸ்

* விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது.
* இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலை நிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்
* கொரோனா காலத்தில் யாரும் பட்டினியில் இருக்க கூடாது என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
* 2023 ஜனவரி 1 முதல் மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
* கொரோனா காலத்தில் 28 மாதங்களில் 80 மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.
* 2014-ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற பின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.
* மோடி பதவியேற்ற பின் உலகின் 5-வது பெரிய பொருளாதாரா நாடாக இந்தியா மாறியுள்ளது.
* 9ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
* பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் 9 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
*நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் –
*பிரதமரின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி
*விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேளாண் நிதி ஒதுக்கீடு.
*கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.
*நாட்டின் முதுகெலுமபான விவசாயட்த்துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
*நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். 2014 முதல் அமைக்கபட்ட157 மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து இவை முக்கிய இடங்களில் அமைக்கப்படும். 2047-ல் 0 முதல் 40 வயது வரையிலான மக்களுக்கு இரத்த சோகையை முற்றிலும் ஒழிக்கத் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
** குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

மொத்தத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து

விலை உயரும் பொருட்கள்:

தங்கம், வெள்ளி நகைகள்
கவரிங் நகைகள்
சிகரெட்
இறக்குமதி செய்யப்பட்ட கார்
இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள்
மின்சார சமையலறை புகைபோக்கி
இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்
பொம்மைகள்

விலை குறையும் பொருட்கள்:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள்
லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்

இதனிடையே மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், “ பாஜக மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதற்கு மோடி அரசின் பட்ஜெட் ஒரு சான்று என்றும், இது நாட்டை மனதில் கொள்ளாமல் தேர்தலை மட்டும் மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட்” என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், “இந்த பட்ஜெட்டில் நாட்டில் பயங்கர பிரச்சினையாக உள்ள வேலையின்மைக்கு தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் பணவீக்கம் உள்ளது, சாமானிய மக்கள் சிரமத்தில் உள்ளனர். அன்றாடப் பொருட்களின் விலையைக் குறைக்கும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மாவு, பருப்பு, பால், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி நாட்டை கொள்ளையடித்த மோடி அரசு தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்த பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதார பட்ஜெட்டில் முன்னேற்றமும் இல்லை. விவசாயிகளுக்கு எதிராக உள்ள நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் எதையும் கொடுக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும், அதை ஏன் நிறைவேற்றவில்லை?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

“மொத்தத்தில் மோடி அரசு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடினமாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்ததைத் தவிர, மோடி அரசு எதுவும் செய்யவில்லை” என மத்திய பட்ஜெட் குறித்து மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

இது போல் “வருமான வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே பலன் அளிக்கும். பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்கும் ஆனது என்பதிலிருந்து ஒன்றிய அரசு முற்றிலும் விலகிச் செல்வதை இந்த பட்ஜெட் காட்டுகிறது. தமிழ்நாட்டுக்கு புதிய திட்டம் எதையுமே அழிக்காத ஒன்றிய அரசு பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது வேதனை” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!