தமிழக வரலாற்றில் முதன் முதலாக எழுத்தாளர் கி.ரா-வுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

தமிழக வரலாற்றில் முதன் முதலாக எழுத்தாளர் கி.ரா-வுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

றைந்தாலும் தமிழர் எவராலும் மறக்க இயலாத எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு மரியாதை செய்யப்பட்டது.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா. (99) வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பால் 17.05.21 இரவு 11 மணிக்கு காலமானார். அவரது உடல் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் அவரது உடல், அவர் சொந்த ஊரான கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிற்பகல் 12.30 மணியளவில் அவர் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உடலுக்கு, இறுதி சடங்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி – இடைசெவலில் நடைபெற்றது. அப்போது காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கி.ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழக வரலாற்றில் எழுத்தாளர் ஒருவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் சிலை அமைக்கப்படும். கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுப்பிக்கப்பட்டு அங்கு அவருடைய புகைப்படங்கள் – படைப்புகள் வைக்கப்படும். என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (18-5-2021) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!