சூடானில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை !

சூடானில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை !

டக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் வாராந்திர போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

ஜனநாயக ஆட்சி நடந்து வந்த சூடானில் 1989ம் ஆண்டு முதலாக உமர் அல்பஷீர் அதிபராக பதவி வகித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டு உமர் அல்பஷீர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இடைக்கால பிரதமராக அப்துல்லா ஹம்தோக் நியமிக்கப்பட்டாலும் ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் அவரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 2021ம் ஆண்டு அதிகாரத்தை கையில் எடுத்த சூடான் ராணுவம், நாடு முழுவதும் அவசர நிலையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பித்தது. இதனை கடுமையாக எதிர்த்த சூடான் மக்கள் ஆட்சி அதிகாரத்தை சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி கடந்த 10 மாதங்களாக போராடி வருகின்றனர்.

வாரம் ஒருமுறை நடைபெற்று வரக்கூடிய போராட்டத்தில் தற்போது வன்முறை வெடித்துள்ளது. சூடானின் தலைநகரமான கார்தூமில் குவிந்த இளைஞர்கள், ராணுவ வாகனங்களை சூழ்ந்துக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் தொடுத்தனர். பதிலுக்கு ராணுவத்தினரும் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.

error: Content is protected !!