கச்சா எண்ணெய் விலையை குறைத்தது சவுதி அரேபியா!

கச்சா எண்ணெய் விலையை குறைத்தது சவுதி அரேபியா!

கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் முதல் இடம் வகிக்கும் நாடாகிய சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1.3 டாலர் வரை இதனால் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று சவுதி அரேபியாவில் எண்ணெய் விற்பனை நிறுவனமான அரம்கோ அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு வடமேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டுக்கு பொருந்தாது எனவும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு காரணமாக ஆசியாவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தன்னுடைய வாடிக்கையாளர்கள் ஆக்கிக்கொள்ள சவுதி அரேபியா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று எண்ணெய் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் விலை குறைப்பு காரணமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு விலையை குறைக்க முன்வர மாட்டார்கள் என்றும் அந்த நிபுணர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!