இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளின் டிஜிட்டல் & தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றிடுச்சு!

இந்தியாவில் நடக்கும்  கிரிக்கெட் போட்டிகளின் டிஜிட்டல் & தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றிடுச்சு!

ந்தியாவில் நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டுகளில் இந்திய அணி 88 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாட உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

வளர்ந்து வரும் நம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வியாபாரம் தான் சகல துறைகளையும் தீர்மானிப்பதாக இருக்கும் நிலையில், பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதிலும், உள்நாட்டு வியாபாரிகள் துவங்கி வெளிநாட்டு வியாபாரிகள் வரை அனைவரும் அதிக முதலீடு செய்யும் இடம் விளம்பரம் என்பதுதான். அப்படியான விளம்பரதாரர்களின் ஏக ஒத்துழைப்பால் நடைபெறும் மிகவும் பிரமாண்டமான முறையில் கடந்த 16 வருடங்களாக நடந்து முடிந்துள்ள போட்டித் தொடர்தான், இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர். இந்த தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கிடைக்கும் வருமானம் மட்டும் ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் கோடிகளைக் கடக்கின்றது. இதன் மூலம் உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்ற புகழையும் அடைந்துள்ளது இந்த பிசிசிஐ.

இந்நிலையில் ஐபிஎல் தொடரை டிவி மற்றும் டிஜிட்டல்களில் ஒளிபரப்புச் செய்ய மூன்று ஆண்டுகள், 5 ஆண்டுகள், அவ்வப்போது ஒரு ஆண்டுக்கெல்லாம் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வயாகாம் 18 என்ற ஸ்போர்ட்ஸ் சேனல் இந்தியாவில் டிவி மற்றும் டிஜிட்டல்களில் ஒளிபரப்புச் செய்ய நடத்தப்பட்ட ஏலத்தில் இந்திய மதிப்பில் ரூபாய் 6 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த ஏலம் என்பது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிப்பரப்புச் செய்ய நடத்தப்பட்டது. இந்த ஏலம் ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் சேனலாக உருவெடுக்கிறது வயாகாம் 18. அதாவது ஐபிஎல் போட்டிகளை டிஜிட்டல் தளத்திலும் அதாவது ஓடிடியிலும், இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடும் போட்டிகளை டிவி மற்றும் டிஜிட்டல் தளத்திலும் ஒளிபரப்புச் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக அதாவது 2012ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் டிவி மற்றும் மொபைலில் ஐபிஎல் தொடர் தொடங்கி இந்திய அணி இந்தியாவில் விளையாடிய போட்டிகள் அனைத்தையும் ஒளிபரப்பிக்கொண்டு இருந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது

error: Content is protected !!