“யமன்” – அரசியல் இல்லாத அரசியல்வாதி படமாம்!

“யமன்” – அரசியல் இல்லாத அரசியல்வாதி படமாம்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. அரசியலை மையமாக கொண்டு  ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படத்தை, ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கமும், ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும்  இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.  மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்திருக்கும் ‘எமன்’  திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

eman feb

‘ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து தான் நான் எப்பொழுதும்  கதை எழுதுவேன். அதற்கு பிறகு தான் அதை எப்படி காட்சி படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து சிந்திப்பேன். இந்த ‘எமன்’ படத்தின் கதையையும் நான் அந்த வகையில் தான் உருவாக்கி இருக்கின்றேன்.  சிவனோட ஓர் அவதாரம்தானே எமதர்ம ராஜா! கடவுளே குறுக்க வந்தாலும் தன் கடமையைத் தவறாதவர் எமன். குற்றம் செய்தவங்க யாரா இருந்தாலும் தண்டிப்பார். அப்படியொரு பெருமைக்குரியவர் எமன். ஆனா கோடம்பாக்கத்துலதான் ‘ஏன் இப்படி டைட்டில் வச்சிருக்கீங்க’னு கேட்கறாங்க. டோலிவுட்ல அப்படியில்ல. அங்கே ‘யமலீலா’, ‘எம தொங்கா’னு எமன் பெயர் வச்ச படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கு…

இதுலே ஒரு சராசரி மனிதன், அரசியல் மூலமாக தன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு, சிம்மாசனத்தில்  அமர முயற்சி செய்கின்றான். அதில் அவன் வெற்றி பெற்றானா? இல்லையா? என்பது தான் ‘எமன்’ படத்தின் ஒரு வரி கதை.அதாவது இது அரசியல்வாதியின் பார்வையில் நகரும் படம்தான். ஆனால் நீங்க நினைக்கறஃ அரசியல் இருக்காது

தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் கொடுத்து, ‘எமன்’ படத்திற்கு புத்துயிர் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் எங்களின் ‘எமன்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் அதை உறுதி செய்வார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.

Related Posts

error: Content is protected !!