உலக ஹலோ தினம் = இன்று!

உலக ஹலோ தினம் = இன்று!

ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு..

அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ ..

இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தையும், வசதிகளையும் வேண்டுமானால் அதிகமாக்கி விட்டிருக்கலாம்.. ஆனால்,மனித கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ள ‘உறவுகளின்‘ உன்னதத்தை மறந்து மனிதன் எந்திரமாய் வாழும் வேதனை நிலை இன்று..

ஒரு தட்டில் பிணைந்து அன்பொழுக சோறு தந்து பாசத்தை உணவில் ஊட்டி வளர்த்த அம்மா ..இன்று பாட்டியாக மாறிய பின், அதே வீட்டில், அதே குடும்பத்தில் நான்கு அடுப்பில் தனித்தனி சமையல் ..ஒரு பாயில் உறங்கிய ,ஒருதாய் வயிற்று பிள்ளைகள் இன்று ஒருவருக்கொருவர் பேசக்கூட நேரமின்றி , அடுத்த தேசத்து விரோதிகளாய் அண்ணன் தம்பிகளை பார்க்கும் கொடுமை ..

இப்படி… நம் அன்பை, அபிமானத்தை, அக்கறையை, அடுத்தவரிடம் சொல்லாத இடங்களில் எல்லாம் இதே நிலைதான் ..இந்தநிலை மாற நான் என்ற அகங்காரம் இல்லாத அன்பின் வார்த்தையான ‘ஹலோ’ வை சொல்வோம் அனைவரிடமும்..

“ஹலோ” ஒரு ஆனந்தத்தின் ஆரம்பம்..

“ஹலோ” இது ஒரு மொழியின் சொல் அல்ல ..இது மற்றவர் கவனத்தை தன் மீது ஈர்க்கச் செய்யும் ஒரு வசிகர ஓசை ..

இப்படி “ஹலோ’ என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து “ஹலோ’ வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்” என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.இந்நிலையில் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம்,

இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் “ஹலோ’ சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், “ஹலோ’ தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

error: Content is protected !!