மகளிர் அணி கேப்டன் ஹர்மன்: சென்னையில் பிரம்மாண்ட பிக்கில் பால் விழாவில் பங்கேற்பு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்து நாட்டிற்கே பெருமை சேர்த்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கோப்பைப் வெற்றிக்குப் பிறகு முதன்முறையாகச் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.
சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (Sathyabama Institute of Science and Technology) வருகை தந்துள்ள அவர், பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr. மரியாசீனா ஜான்சன் மற்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் Dr. மரி ஜான்சன் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.

🎾 பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வு!
விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும் பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வில் ஹர்மன்ப்ரீத் கவுர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
- நிறுவனம்: தமிழகத்தில் 38 வருடங்களாக கல்விச்சேவையில் புகழ்பெற்ற சத்யபாமா நிறுவனம்.
- போட்டி விவரம்: இந்தியாவிலேயே மிகப்பிரம்மாண்டமான பிக்கில் பால் போட்டியை இந்த நிறுவனம் நடத்துகிறது.
- அரங்கம்: மிக உயர்தர வசதியுடன் தயாரிக்கப்பட்ட 6 உள்விளையாட்டரங்கத்தில் (Indoor Stadium) அனைத்து வயதினரும் கலந்துகொள்ளும் வகையில் இன்று மதியம் போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலகக் கோப்பை வெற்றியின் மூலம் இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், விளையாட்டு மற்றும் கல்வித் துறையில் சாதனை படைக்கத் துடிக்கும் வீரர்களுக்கு இந்த நிகழ்வில் ஊக்கமளிக்கிறார்.


