மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது – சோனியா காந்தி பெருமிதம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது – சோனியா காந்தி பெருமிதம்!

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.நேற்று நாடாளுமன்ற பழைய கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் முதல் நாள்கூட்டம் தொடங்கிய நிலையில், இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. புதிய கட்டடத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் இன்றே தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முன்னரே தெரிவித்து இருந்தார்.

அதன் படி, புதிய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்தார். மேலும், மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றினால் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்றுள்ளனர்.

இருப்பினும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வராது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி 2026ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பின் மக்களவை தொகுதி மக்களவை தொகுதி நடைபெறும். மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும், மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்தலுக்கு தேர்தல் வேறுபடும் வகையில் மசோதா வழிவகை செய்யும் என்றும் தற்போது நடைமுறையில் உள்ள எஸ்சி, எஸ்டி தொகுதி ஒதுக்கீடு மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமுள்ள சட்டசபைகளில் குறைந்தபட்சம் 50% சட்டசபைகள் ஒப்புதல் அளித்த பிறகே சட்டம் அமலாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதை அடுத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி,- ”இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஆனால் இந்த மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் செயல்படுத்துவோம் என்பது கண்துடைப்பு போல் உள்ளது. தேர்தலுக்காக இந்த மசோதாவைக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை, ஆயினும் தேர்தல் நேரத்தில். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்து விட்டோம், பெண்களுக்காக நாங்கள் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கிறோம் என்று அறிவித்து வாக்கு வங்கிக்காக மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. என்று கூறி உள்ளார்.

அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அவரிடம் கேட்ட போது அவர், அது எங்களுடையது (அப்னா ஹைய்) என்று தெரிவித்தார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூகவலை தள பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில்,”மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியாகும் கருத்தினை நாங்கள் வரவேற்கிறோம். மசோதாவின் விவரங்களுக்காக காத்திருக்கிறோம். இதுகுறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதித்து இந்த திரைமறைவு அரசியலுக்கு பதிலாக ஒருமித்த கருத்தை எட்டியிருக்கலாம்” என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!