ஐஸ்க்ரீம், கார்பனேடட் குளிர்பானங்கள், பபுள் கம் ,சூயிங் கம் மூலம் புற்று நோய்- புதிய ஆய்வு முடிவு!

ஐஸ்க்ரீம், கார்பனேடட் குளிர்பானங்கள், பபுள் கம் ,சூயிங் கம் மூலம் புற்று நோய்- புதிய ஆய்வு முடிவு!

ர்வதேச அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பர்டேம் எனப்படும் செயற்கை இனிப்பு சுவையூட்டி புற்றுநோயை உண்டாக்கும் என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையுடன் (IARC) இணைந்து இம்மாதம் 14 ஆம் தேதி இந்த எச்சரிக்கை வெளிப்படையாக வெளியிடப்படுமாம்.

மாறி வரும் உணவு முறைகள் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. செயற்கை இனிப்பூட்டி, நிறமூட்டி என பார்த்தவுடன் கவரும் வகையில் உணவு முறை மாறிவிட்டது. குறிப்பாக எந்த உணவு சாப்பிட்டாலும் அதன் இறுதியில் குளிர்பானங்கள் இல்லாமல் இருப்பது பலருக்கும் திருப்தியாக அமையாது. இதை எதற்கு குடிக்கிறோம் என்பதே பலருக்கும் தெரியாது.

கோகோ கோலா, பெப்சி, செவன் அப், மிரண்டா போன்ற குளிர்பானங்களை குடித்தால் தான் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு என பலரும் தவறாக நினைத்து டயட் கோக் பக்கம் பலரும் திரும்பியுள்ளனர். ஆனால் இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல தசாப்தங்களாக டயட் கோக்கு முதல் சூயிங்கம் வரையில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்புகளில் ஒன்றான  அஸ்பார்டேம் அமெரிக்காவில் புதிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.அஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப் பெயர் தான் நமக்கு பரிச்சியம் இல்லையே தவிர அது அடங்கிய உணவுப் பதார்த்தங்கள் நமக்கு நன்கு பரிச்சியமானவையே. குழந்தைகள், இளைஞர்கள், வயதானோர் என அனைவரும் உட்கொள்ளும் ஐஸ்க்ரீம், கார்பனேடட் குளிர்பானங்கள், பபுள் கம் என அழைக்கப்படும் சூயிங் கம் ஆகியனவற்றில் இந்த அஸ்பர்டேம் உள்ளது.

அஸ்பர்டேம் என்றால் என்ன? அஸ்பர்டேம் என்பது வாசனையில்லாத, வெள்ளை நிறத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏதுமற்ற இனிப்பூட்டி. இது இயற்கையான சர்க்கரையைவிட இனிப்பு சுவை அதிகம் கொண்டது. சுகர் ஃப்ரீ, லோ கலோர் என்று அழைக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் அனைத்துமே இந்த அஸ்பர்டேம் மூலக்கூறு கொண்டவைதான். அஸ்பர்டேமில் அஸ்பர்டிக் அமிலம் மற்றும் ஃபினைலால்னைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன.

அஸ்பார்டேமில் கலோரிகள் இல்லை என்றாலும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பை கொண்டுள்ளது. இதனிடையே உலகம் முழுவதும் செயற்கை இனிப்புகளின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியதால் இந்த ஆய்வை நடத்திவரும் உலக சுகாதார அமைப்பின் அனைத்துலகப் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு, ஜூலை மாதம் இதன் முடிவை வெளியிடும் என கூறப்படுகிறது. இதில், ‘அஸ்பர்டேம் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்’ அடங்கிய பட்டியலில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

பிரான்ஸில் இந்த ஆய்வானது சுமார் 1 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிக அளவு செயற்கை இனிப்புகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் மற்றவர்களை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இத்தகைய செயற்கை இனிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவைப் பரிந்துரைத்துள்ளது. மேலும் அஸ்பார்டேம் கொண்ட தயாரிப்புகளில் இனிப்பானின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்பது விதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

இதனிடையே உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிக்கு சர்வதேச செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஹண்ட் வுட், “சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையான ஐஏஆர்சி உணவுப் பாதுகாப்பு அமைப்பு அல்ல. அஸ்பர்டேம் பற்றிய கருத்துகள் அறிவியல்பூர்வமாக நிறுவப்படவில்லை. அந்த ஆராய்ச்சிகள் ஏதும் உணவு பாதுகாப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஐஏஆர்சியின் கருத்து வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்யும்” என்று சொல்லி இருக்கிறார்.

error: Content is protected !!