வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி தயார்!

வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி தயார்!

நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செயலியான வாட்ஸ் அப் -பை உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் தினமும் பயன்படுத்தி வரும் சூழலில் இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது .அதையொட்டி ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயலியில் பேமென்ட்ஸ் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை சேவைகளை வழங்க காத்திருக்கின்றது. இதற்கான பணிகள் முறையான சிஸ்டம்கள் இல்லாததால் தாமதமாகி வருகிறது.அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும் படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

இத்தனைக்கும் 2018 பிப்ரவரி மாதம் முதல் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சத்தில் ரிக்வஸ்ட் மனி (request money) ஆப்ஷன் இன்வைட் முறையில் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது பேமென்ட்ஸ் அம்சம் பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் உள்ளிட்டவற்றுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்சமயம் வரை வாட்ஸ்அப் செயலியை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது பேடிஎம் சேவையை பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக அலிபாபவின் பேடிஎம் வாட்ஸ்அப் யுபிஐ பேமென்ட் தளம் முறையான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!