உக்ரைன் தொடர்ந்த வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் மார்ச் 7, 8 விசாரணை!

உக்ரைன் தொடர்ந்த வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் மார்ச் 7, 8 விசாரணை!

ஷ்ய படையெடுப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த வழக்கு மார்ச் 7, 8 ந்தேதிகளில் விசாரணைக்கு வர உள்ளது.

நேட்டோ படைகளுடன் உக்ரைன் இணையும் திட்டத்தை எதிர்த்து வந்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த வாரம் போர் தொடுத்தது. போர் தொடுக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆன நிலையில், பெரும்பாலான முக்கிய நகரங்கள் ரஷ்ய படைகள் வசம் வந்துவிட்டன. தலைநகர் கீவ்–இல் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. உக்ரைன் தரப்பில் தொடரப்பட்டுள்ள மனுவில், ”ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் வகையில் உக்ரைனில் இனப்படுகொலை செய்வதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த அவசர உத்தர பிறப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!