திருப்பத்தூரில் நின்று செல்ல இருக்கும் உதய் எக்ஸ்பிரஸ்!

திருப்பத்தூரில் நின்று செல்ல இருக்கும் உதய் எக்ஸ்பிரஸ்!

மிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரியநகரமான கோயம்புத்தூர்.  தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் அளவுக்கு ஆட்டோமொபைல் மற்றும்மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை, தமிழகத்தின் தொழில் நகரம்.மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் விரவிக் கிடக்கின்றன. ஜவுளித்தொழில், பொறியியல் தொழில், ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்புநிறுவனங்கள் என பல வகையான தொழில்கள் இங்கு ஆட்சி புரிகின்றன. மேலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இதன் காரணமாக எப்போதுமே கோவைக்கான ரயில் தேவைகள் அதிகமாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.காலையில் கோவையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் தான் கோவை மக்கள் பெங்களூர் செல்லவும், பெங்களூரில் இருந்து கோவை வரவும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சாமானிய, ஏழை எளிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் ரயிலாக உதய் எக்ஸ்பிரஸ் இருக்கிறது. அதேநேரம் பெங்களூர் கோவை இடையே பகல் நேர ரயில்கள் இருமார்க்கமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. அந்த கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. அந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் கோவை பெங்களூர் இடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். தற்போதைய நிலையில் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் செல்கிறது.

இந்த நிலையில், பெங்களூரு-கோயம்புத்தூர் உதய் ரயில் திருப்பத்தூரில் நின்று செல்ல வேண்டும் என இரயில்வே வாரியத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, பெங்களூரு-கோயம்புத்தூர்-பெங்களூரு உதய் ரயில் திருப்பத்தூரில் நின்று செல்ல இரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நிறுத்தம் செயல்பாட்டிற்கு வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!