அமெரிக்க அதிபர் ட்ரம்ப் -பின் தீபாவளி வாழ்த்துகள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் -பின் தீபாவளி வாழ்த்துகள்!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அந்த நாட்டு எம்.பி.க்களுடன் வெள்ளிக்கிழமை தீபாவளி கொண்டாடினார் அதிபா் டொனால்ட் ட்ரம்ப்.  இந்திய வம்சாவளி எம்.பி.க்களான கமலா ஹாரிஸ், பிரமீளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூா்த்தி, ரோஹித் கன்னா, அமரீஷ் பேரா ஆகியோா் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனா். ஒவ்வொருவரும் தங்களது வாழ்வின் நேர் மறையான அம்சங்களை வரவேற்க வேண்டும் என்பதை தீபாவளி நினைவூட்டுவதாக அப்போது டிரம்ப் குறிப்பிட்டாா்.

இதையொட்டி அவர் வெளியிடுள்ள செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, நமது நாட்டின் மிக முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்து வதாகும். நமது அரசியல் சாசனத்தில் கூறி உள்ள உரிமைகளை எனது நிர்வாகம் பாதுகாக்கும். இதன்மூலம் எல்லா மத நம்பிக்கை கொண்ட மக்களும் தங்கள் நம்பிக்கையின்படியும், மனசாட்சியின்படியும் வழிபட முடியும்” என கூறி உள்ளார்.

மேலும், “தீபங்களின் பண்டிகையான தீபாவளி கொண்டாடுகிறவர்களுக்கு, அந்த கொண்டாட்டம் மகிழ்ச்சிகரமானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் அமைய நானும், மனைவி மெலனியாவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” எனவும் தெரிவித்து இருக்கிறார்.

error: Content is protected !!