வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்தது எஸ் பி ஐ!

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்தது எஸ் பி ஐ!

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வரும் மார்ச் 31 வரை வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்துள்ளது என்ற தகவலை அறிக்கை மூலமாக அந்த வங்கி தெரிவித்து உள்ளது. அதோடு வீட்டுக் கடன் மீதான புராஸஸிங் கட்டணத்திற்கு 100 சதவிகித விலக்கு கொடுப்பதாக தெரிவித்துள்ளது எஸ்பிஐ.

கடன் பெரும் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் மற்றும் கடன் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி சலுகை இருக்கும் எனவும் தெரிகிறது. கடனை முறையாக திருப்பி செலுத்துவர்களுக்கு இது மாதிரியான வட்டி சலுகைகள் கிடைக்க வேண்டுமென்பதில் தங்கள் வங்கி நிர்வாகம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வாடிக்கையாளர்களின் சென்டிமென்டுகளுக்கு எங்கள் வங்கி மதிப்பு கொடுக்கிறது. இந்த சலுகை நிச்சயம் மாதாந்திர தவணை தொகையை குறைக்க உதவும்’என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

75 லட்ச ரூபாய் வரை 6.7 சதவிகிதமும், அதற்கு மேலான கடன் தொகைக்கு 6.75 சதவிகிதமும் வட்டி விகிதம் இருக்கும் என தெரிகிறது. யோனா அப்ளிகேஷன் மூலம் கடனுக்கு விண்ணப் பிப்பவர்களுக்கு வட்டியில் 0.05 சதவிகிதமும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு 0.05 சதவிகிதமும் கூடுதலாக வட்டியில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

error: Content is protected !!