இதுதான் பேஸ்புக் ஹெட் ஆபீஸாம்! -வீடியோவில் காட்டும் மார்க்!

இதுதான் பேஸ்புக் ஹெட் ஆபீஸாம்! -வீடியோவில் காட்டும் மார்க்!

உலக இளைஞர்களில் பெரும்பாலானோரை கட்டி இழுத்து வைத்திருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தளம் தமது ஊழியர்களுக்காகக் கனவு அலுவலகம் ஒன்றைச் சமீபத்தில் திறந்துள்ளதாகவும். 4 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாகும் இந்த அலுவலகத்தின் மொட்டை மாடிக் கூரைத் தோட்டத்தின் பரப்பளவு மட்டும் 9 ஏக்கராம். இந்தக் கூரைத் தோட்டத்தின் படத்தைப் பார்த்தாலே நமக்கு ஆச்சரியத்தில் மூச்சு முட்டுகிறது என்றெல்லாம் நியூஸ் வந்த நிலையில் முதன்முறையாக பேஸ்புக் நிறுவனமே, தனது தலைமை அலுவலத்தை நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது. 3:51 நிமிடங்கள் கொண்ட அந்த காணொளியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர் பெர்க் தோன்றி, தனது அலுவலகத்தைச் சுற்றிக் காண்பித்திருக்கிறார்.
mark-zuckerberg
அதில், பேஸ்புக் ஊழியர்களின் டேபிள் தனது அலுவல் இடம், மீட்டிங் ஹால் போன்றவற்றை ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா விளக்குகிறார் மார்க். இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் இந்த புது அலுவலகத்துக்கு வந்த தாகக் கூறும் மார்க், ‘ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், அவர்களை, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வைப்பதுமே, தனது வேலை’ என்கிறார். இதனாலேயே தனது ஹெட் ஆபீசின் ஊழியர் அறைகளை தனித் தனியாக கேபின் போட்டு அமைக்காமல், ஒரே கூரையின் கீழ் இடையில் எவ்வித மறைவுகளும் இல்லாமல் அமைத்திருக்கிறாராம்.

நிறுவனர் பொறுப்பிலிருக்கும் மார்க் அமர்ந்து வேலை பார்க்கும் இடமும், விசேஷமாக எந்த வசதிகளும் செய்யப் படாமல் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. அவர் மேஜையின் இரு பக்கங்களிலும் புத்தகங்கள், அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. அதில் தொலை தொடர்பு குறித்த புத்தகமும் அடக்கம். அதற்கு அருகிலேயே ஃபேஸ்புக் கின் சின்னம், அதுவும் ஒரு மரப்பட்டையில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெஷலாக ஒரு செயற்கைக் கோள், நிறுவனத்தின் உள்கட்டமைப்பைக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டிருக்கிறது.

தனது பெரும்பாலான நேரத்தை இங்கேதான் செலவிடுகிறேன் என்று கான்ஃபரன்ஸ் அறையைக் காண்பிக்கிறார் மார்க். பேஸ்புக் அலுவலக ஊழியர்களுக்கு எனத் தனியாக எந்தவொரு அறையையும் ஒதுக்காத மார்க், வெளியில் இருந்து சந்திக்க வருபவர்களையும், அலுவல் விஷயமாகத் தன்னைக் காண வருபவர்களையும் சந்தித்துப் பேசவே இந்த இடம் என்கிறார். ”எனது அலுவலகமும், வேலையும் மிகவும் வெளிப்படையானது’ என்று தெரிவிக்கும் மார், ”இங்கே வேலை பார்க்கும் ஸ்டாப்ஸ் தங்களை சுதந்திரமாக உணரலாம்; அதன் மூலம் அவர்களின் வேலையும் சிறப்பாக அமைகிறது’ என்று பெருமை பொங்க தெரிவிக்கிறார்

இனி பேஸ்புக் தலைமை அலுவலகத்தில், மார்க் பேசும் அந்த வீடியோ காட்சியை நீங்களேப் பாருங்களேன்:

https://www.youtube.com/watch?v=Sm255EucsNY

Related Posts

error: Content is protected !!