இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய மூன்று சீர் திருத்தம்! – ஐ எம் எஃப் பரிந்துரை!

இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய மூன்று சீர் திருத்தம்! – ஐ எம் எஃப் பரிந்துரை!

இந்திய பொருளாதாரம் மற்றும் தெற்காசிய பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது. அதில், 2017 ல் 7 சதவீதமாக உள்ள பொருளாதார சரிவு, 2018 ல் 7.3 சதவீதம் வரை இருக்கும். ஆகையால் நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகித மந்தநிலை, தெற்காசிய வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும். இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளை விட இரண்டு இடங்கள் பின்தங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2016 ல் 7.1 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவு, 2017 ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே 5.7 சதவீதத்தை எட்டி உள்ளது. ஜிஎஸ்டி, 2018 ம் ஆண்டிலேயே இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்  இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான மூன்று சீர்திருத்தங்கள் பற்றி பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எப்) பரிந்துரை வழங்கியுள்ளது . இது குறித்து பன்னாட்டுச் செலாவணி நிதிய ஆசிய பசிபிக் பிரிவு துணை இயக்குனர் கென்னத் காங் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம், “இந்தியாவில் வங்கிகளின் வராக்கடன் பிரச்சினை மிக முக்கிய சிக்கலாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வராக்கடன்களை வசூலிக்க மிகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும். வங்கிகள் கடனை எளிதாக திரும்ப வசூலிக்கும் வகையில் விதிகளை மேம்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, வருவாயை ஈட்டும் நடவடிக்கைகள் மேற்கொண்டு நிதியை ஒருங்கிணைக்க வேண்டும். மானியங்களை ரத்து செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, தொழிலாளர்களின் உற்பத்தித் திறன்களை அதிகரிக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பொருளாதாரம் வலுப்படும். விவசாயத்துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.இம்மூன்று சீர்திருத்தங்களும் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவில் மத்தியில் மற்றும் மாநிலங்களில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த சுமார் 250 சட்டங்கள் உள்ளன. இவற்றைக் குறைக்க வேண்டும்.ஆண் – பெண் தொழிலாளர்க்ளுக்கிடையே ஊதிய விகிதாச்சாரம் இந்தியாவில் அதிக வேறுபாட்டுடன் உள்ளது. இதை சீராக்க முயற்சி செய்தால் பெண்கள் அதிக அளவிலா வேலைவாய்ப்புகளை பெறும் சூழல் உருவாகும்”
இவ்வாறு கென்னத் காங் கூறினார்.

error: Content is protected !!