‘108 ஆம்புலன்ஸ்’ செயலி அறிமுகம் – எடப்பாடி தொடங்கி வைத்தார்

‘108 ஆம்புலன்ஸ்’ செயலி அறிமுகம் –  எடப்பாடி  தொடங்கி வைத்தார்

அவசரகால முதலுதவிக்காக 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 புதிய 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கும் அடையாளமாக, 12 அவசரக் கால ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இன்று சென்னை தலைமை செயலத்தில் முதல்வர் பழனிசாமி, ஆம்புலன்ஸ் சேவைக்காக ‛அவசரம் 108′ என்ற மொபைல் போன் ‛ஆப்’-யை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆம்புலன்ஸ் சேவைக்காக செயலி ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது இது முதல் முறையாகும். பின்னர் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 108 ஆம்புலன்ஸ் சேவையை எளிதில் பெற அவசர 108 என்ற ‛ஆப்’பை ஐஐடி உருவாக்கியுள்ளது.

108 உதவி மையத்திற்கு நாள்தோறும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இவற்றால், 50 சதவீத அழைப்புகள் ஆன்டிராய்டு மொபைல் போனில் தான் வருகின்றன. இந்த ஆப் மூலம் அழைக்கப்படும்போது விபத்து நடந்த இடத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்டுபிடிக்க முடியும். இந்த செயலி மூலம் காவல்துறை, விபத்து, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கும் இந்த செயலி பயன்படுத்த முடியும். இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், குறிப்பிட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுவிடும். ஆன்டிராய்டு தவிர்த்து, மற்ற போன்களில் பயன்படுத்தும் வகையி்ல இந்த ஆப் அறிமுகம் செய்யப்படும் எனக்கூறினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை விபத்துக்களில் ஒவ்வொரு ஆண்டும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால், விபத்துக்களைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் 108 ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்தல், விபத்து சிகிச்சை மையங்களை ஏற்படுத்துதல், தலைக் காயப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஆப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் தொடர்புகொள்பவரின் இடம் துல்லியமாகக் கண்டறியப்பட்டு, விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்ப உதவும். இதை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், 75 லட்சம் ரூபாய் செலவில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கான செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்பேசிகளை வழங்கும் திட்டத்தின் அடையாளமாக 3 ஓட்டுநர்களுக்கு இத்தகைய செல்பேசிகளை முதல்வர் வழங்கினார்.

இதன் மூலம், 108 மையக் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல்கள், அழைப்பவரின் அருகில் உள்ள 108 அவசர கால ஊர்திக்குப் பரிமாறப்பட்டு, ஊர்தி ஓட்டுநர் விரைவாகப் பாதிக்கப்பட்டவரைச் சென்றடைய உதவும். குறிப்பாக, இது இரவு நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெஇரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!