கனடாவில் அவசரகால நெருக்கடி நிலை!- பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

கனடாவில் அவசரகால நெருக்கடி நிலை!- பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

னடாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் நடத்தத் தடை மற்றும் ட்ரக் ஓட்டுநர்கள் ஒரு மாகாணத்திலிருந்து, மற்றொரு மாகாணத்திற்குச் செல்லவும், அமெரிக்க எல்லையைக் கடக்கவும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்றும் கனடா அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

இந்த நிலையில் டிரக் ஓட்டுநர்கள், “இந்த கட்டுப்பாடு விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். இது எங்களின் உரிமையைப் பறிக்கும் செயல் எனக் கூறி அந்த நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். டிரக் ஓட்டுநர்களின் போராட்டம் வலுத்துக் கொண்டே சென்ற நிலையில், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நெருக்கடி நிலையை அறிவிப்பதாகத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர், “கனடாவுக்கு இது ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு அவர்களுடைய லாரிகள் பறிமுதல் செய்யப்படும். டிரக்குகள் சார்ந்த கார்ப்பரேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். வாகனங்களின் இன்சூரன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கனடாவில் 1970-ம் ஆண்டு ட்ரூடோவின் தந்தை முன்னாள் பிரதமர் பியர் ட்ரூடோவால் அவசரக்கால சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு தற்போது தான் மீண்டும் அந்தச் சட்டம் அங்கு அமலுக்கு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!