மகளிர் மட்டும் டாக்சி! -டெல்லியில் ஏற்பாடு!

மகளிர் மட்டும் டாக்சி! -டெல்லியில் ஏற்பாடு!

பெண்களுக்காக, பெண்களே ஓட்டும் வாடகை கார்களான ‘பிரியதர்ஷி’ தொடங்கி “ஷி டாக்சி’ என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு சூப்பராகவே இயங்குகிறது. இவ்வகை டாக்சிகள் “பிங்க் டாக்சி’ என்ற பெயரில் துபாயில் இயக்கப்படுவதுக் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள குர்கான் மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் 50 பெண்களுக்கு டிரைவர் பயிற்சி அளிக்கப்பட்டு பெண்களுக்கு மட்டுமான பிரத்தியேக டாக்சி சேவை வழங்கப்படவுள்ளது.
womeni_taxi_service_20110228
மாருதி சுசுகி நிறுவனத்துடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி 50 பெண்களுக்கு அந்நிருவனம் ஓட்டுநர் பயிற்சி வழங்கும். பயிற்சி பெறும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற மாவட்ட நிர்வாகம் உதவி செய்யும். இத்திட்டத்தின் தொடக்கமாக விரைவில் 50 மகளிர் மட்டும் டாக்சிகள் குர்கான் மாவட்டத்தை வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மொபைல் அப்ளிகேஷன் மற்றும் பெண்கள் பாதுகப்பு படை போன்ற பல முக்கிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயிருக்கிறது

Related Posts

error: Content is protected !!