வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: முழு விவரம்!

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: முழு விவரம்!

தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.10 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத் தோ்தல் அதிகாரிகளான, ஆட்சியா்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டதையடுத்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளா் நிலவரம் குறித்த விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில், 6.10 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சரியாக தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 ஆக உள்ளது.

மொத்தமுள்ள வாக்காளர்களில் 3 கோடியே 01 லட்சத்து 12 ஆயிரத்து 370 ஆண் வாக்காளர் களும், 3 கோடியே 09 லட்சத்து 25 ஆயிரத்து 603 பெண் வாக்காளர்களும், 6 ஆயிரத்து 385 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் உள்ளது. இங்கு 1.73 லட்சத்து வாக்காளர்கள் உள்ளனர்

.தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஒவ்வோா் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் திருத்தப் பணிகள் நடக்கவுள்ளன. இந்தத் திருத்தப் பணிகளுக்காக நடப்பிலுள்ள வாக்காளா் பட்டியல், வரைவுப் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள், சோ்க்கைகள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம்.

சிறப்பு முகாம்கள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் அதாவது வாக்காளா்கள் வாக்களிக்கச் செல்லும் இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

நவம்பா் 21 மற்றும் 22 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளிலும்,

டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன.

இந்த முகாம்களுக்குச் சென்று வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இறுதி வாக்காளா் பட்டியல்:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்படும். இதன்பின்பு, பொது மக்கள் அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

ஜனவரி 20-ஆம் தேதியன்று வாக்காளா் பட்டியல் வெளியாக உள்ளது.

இதைத் தொடா்ந்து, புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்த்தவா்களுக்கு, தேசிய வாக்காளா் தினமான ஜனவரி 25-ஆம் தேதியன்று அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

2021 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க இந்தியத் தோ்தல் ஆணையம் வாய்ப்புகளை அளித்துள்ளது.

பெயா் சோ்ப்புக்கான விண்ணப்பங்களை வட்டாட்சியா் அலுவலகங்களிலோ, சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், தோ்தல் துறை சார்பில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,.

மேலும் அறிய சென்னை: https://www.elections.tn.gov.in/…/SSR2020_EN_16112020.aspx
பிற மாவட்டங்கள்: https://www.elections.tn.gov.in/rol…/SSR2020_16112020.aspx
error: Content is protected !!