நம்ம திருப்பதி ஏழுமலையானை ஹெலிகாப்டரில் போய் மீட் பண்ண நீங்க தயாரா?

நம்ம திருப்பதி ஏழுமலையானை ஹெலிகாப்டரில் போய் மீட் பண்ண நீங்க தயாரா?

இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து. சுவாமியை தரிசனம் செய்யலாம். இலவச தரிசனம் செல்வோர் திருமலையில் உள்ள கோவிலுக்கு நேரில் செல்ல வேண்டும்.

thirupathi sep 1

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், தங்கும் விடுதியில் உள்ள அறைகள் காலியாக உள்ளதா அல்லது நிறைம்பி வழிகின்றதா?

வயது முதிர்ந்தவர்கள் சுவாமியை எவ்வாறு சீக்கிரம் தரிசனம் செய்வது?

மிகவும் பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ளவர்கள் சுவாமியை விரைவில் சென்று தரிசனம் செய்ய இயலுமா?

உடல் ஊனமுற்றோர் எவ்வாறு சுவாமி தரிசனம் செய்வது?

திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை அனுக வேண்டும்?

குழந்தைகளுக்கு காது குத்து வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

உண்டியலில் பணம் செலுத்தவது எப்படி?

நன்கொடை கொடுப்பது எப்படி? எந்த பெயரில் கொடுக்க வேண்டும்?

மேலும், கோவிலில் வாரி ஆர்ஜித சேவைகள், அதற்கான கட்டணங்கள், முக்கியத் திட்டங்கள், குடில்கள், திருப்பதிக்கான விமான சேவை போன்ற எல்லா தகவல்களும் ஒரே ஒரு போன் மூலம் பேசி உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்று ஒன்றுதான். அது, 0877 – 22 33 333 மற்றும் 0877 – 22 77 777 மற்றும் 0877-2231777, Toll Free nos: 1800425111111, 1800425333333 எண்ணில் போன் செய்து தகவல்களை இலவசமாக பெறலாம். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 24 மணி நேரமும் இலவச தகவல் மையம் செயல்படுகிறது. இந்த தகவல் மையத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் என்று இல்லாமல் எந்த மொழியில் வேண்டும் என்றாலும் நமது சந்தேகத்திற்கு பதில், அந்த மொழியிலேயே கிடைக்கிறது. இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி பயன் பெறலாம்.

இதனிடையே திருப்பதி கோயிலுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா மேற்கொள்ள ஆந்திர மாநில சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான வெள்ளோட்டம் இரண்டு நாள்களில் நடக்கவுள்ளது.தற்போது பேருந்து,ரயில் மூலம் புனித யாத்திரை, சுற்றுலா சேவை அளித்து வரும் ஆந்திர சுற்றுலாத் துறை அம்மாநில அறநிலையத் துறையுடன் இணைந்து புதிதாக ஹெலிகாப்டர் ஆன்மிகச் சுற்றுலாச் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.இதற்காக டெல்லியைச் சேர்ந்த சம்மீட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய சுற்றுலாச் சேவை மூலம் ஸ்ரீசைலம், திருமலை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

விஜயவாடாவிலிருந்து காலை 8 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு நேராக ஸ்ரீசைலத்தை சென்றடைகிறது. அங்கிருந்து கார் மூலம் பக்தர்கள், கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அபிஷேகம், குங்கும அர்ச்சனை செய்வித்து, விஐபி தரிசனம் வழங்கப்படுகிறது.

அதன்பின் ரோப் வே (இழுவை ரயில்) மூலம், பாதாள கங்கைக்கு அழைத்துச் சென்று படகு சவாரி செய்ய வைக்கின்றனர். பின்னர் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 1.30 மணிக்கு ஹெலிகாப்டர் திருப்பதியை அடைகிறது.

திருப்பதியிலிருந்து கார் மூலம் திருச்சானூர், சீனிவாசமங்காபுரம், ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களில் தரிசனம் செய்ய வைக்கின்றனர். இதையடுத்து, திருமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு அங்கு தங்கும் வசதி அளிக்கப்படுகிறது. மறுநாள் காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து காலை 7.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 8.30 மணிக்கு மீண்டும் விஜயவாடாவை சென்றடைகிறது.

இதில், விஜயவாடா- ஸ்ரீசைலம் – திருமலை, ஹைதராபாத்-ஸ்ரீசைலம்-திருமலை என இரண்டு சுற்றுலாத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு ஹெலிகாப்டரில் 6 பேர் வசதியாக அமர்ந்து பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ. 15,000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் ஓய்வெடுக்கும் சமயத்தில் ஸ்ரீசைலம், திருமலை அருகில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கவும் சுற்றுலாத் துறை வாய்ப்பு அளிக்கிறது. இதற்கு, ஒரு நபருக்கு ரூ. 2,500 கூடுதலாக கட்டணம் வசூலிக்க உள்ளனர். இதற்கான வெள்ளோட்டம் இன்னும் இரு நாள்களில் நடைபெற உள்ளதாக ஆந்திர சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts

error: Content is protected !!