தி ராஜா சாப் விமர்சனம்–இந்த ராஜபாட்டையை ரசிகர்கள் விரும்புவார்களா?
பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் -அதாவது ப்ரீ புக்கிங் வசூல் சுமார் ரூ. 50 முதல் 60 கோடி வரை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆந்திரப் பிரதேசம் மற்றும் வெளிநாடுகளில் இப்படத்திற்கான முன்பதிவு மிகத் தீவிரமாக இருந்தது. குறிப்பாக, ஆந்திராவில் மட்டும் முன்பதிவு மூலம் சுமார் ரூ. 28 கோடியை இப்படம் ஈட்டியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரபாஸின் படங்களுக்கு இருக்கும் மவுசு காரணமாக, அங்கேயும் பல கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பே விற்றுத் தீர்ந்துள்ளன. நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தள்ளிப்போனது, ‘தி ராஜா சாப்’ படத்திற்குத் திரையரங்கு ஒதுக்கீட்டிலும் வசூலிலும் பெரும் சாதகமாக அமைந்துவிட்டது. இப்படி இன்று வெளியாகியுள்ள ‘தி ராஜா சாப்’, பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தினாலும், சினிமா ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தியதா? விரிவான ரிவியூ இதோ:
கதைக்கரு:
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பாட்டி கங்கம்மா (ஜரினா வாஹேப்), பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற தனது கணவர் கனக ராஜூ (சஞ்சய் தத்) வருவார் என ஏங்குகிறார். தன் பாட்டிக்காகத் தாத்தாவைத் தேடி ஹைதராபாத் செல்கிறார் நாயகன் ராஜா (பிரபாஸ்). அங்கு அவருக்குத் தன் வம்சாவளி பற்றிய மர்மங்களும், நர்சாபூர் காட்டு கோட்டைக்குள் இருக்கும் திடுக்கிடும் ரகசியங்களும் தெரியவருகின்றன. அந்தப் புதிர்களை ராஜா எப்படி விடுவித்தார் என்பதே கதை.
நடிப்பு: பிரபாஸின் ‘ஒன் மேன் ஷோ’
-
பிரபாஸ்: பாசக்காரப் பேரன், கலகலப்பான வாலிபன் எனப் பல பரிமாணங்களில் பிரபாஸ் மிளிர்கிறார். குறிப்பாக அவரது காமெடி டைமிங் மற்றும் ஸ்டைலான லுக் படத்திற்குப் பலம்.
-
சஞ்சய் தத்: வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் மந்திரம் சொல்லும் மந்திரவாதியாக வந்து போகிறார்.
-
நாயகிகள்: நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோருக்குப் பாடல்களில் ஆடுவதைத் தவிரப் படத்தில் உருப்படியான வேலை எதுவுமில்லை.
பிளஸ் & மைனஸ்: ஒரு பார்வை
ஆந்தை தீர்ப்பு:
இயக்குநர் மாருதி, பிரபாஸைத் துடிப்பான கேரக்டரில் காட்ட உழைத்த அளவுக்குத் திரைக்கதையில் கவனம் செலுத்தவில்லை. முதல் ஒரு மணி நேரம் கதையோடு ஒன்றவே நேரமெடுக்கும் நிலையில், எடிட்டிங் மற்றும் எழுத்து ஆகியவற்றில் மிகப்பெரிய சறுக்கல் தெரிகிறது. பிரபாஸ் ரசிகர்களுக்குச் சில கொண்டாட்டங்கள் இருந்தாலும், சராசரி சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘ராஜா சாப்’ ஏமாற்றமே.
மார்க்: 2.25/5


