எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க நேபாள அரசு முடிவு!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க நேபாள அரசு முடிவு!
உலகின் உயரமான மலை, கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த இடம் உள்பட பல்வேறு பெருமைகளை கொண்டது எவரெஸ்ட் சிகரம். நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைக்கோடும் இதுவே!  இந்த எவரெஸ்ட் மலையில் ஆண்டுதோறும் மலையேறும் பயிற்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நேபாளம் செய்து வருகிறது. நேபாளம் வழியாக வீரர்கள் மலையேறி வருகின்றனர்.
இந்த எவரெஸ்ட் மலை சிரகத்தின் உயரம் குறித்து அவ்வப்போது குழப்பமான தகவல்கள் வெளியாவது உண்டு. கடந்த 1955ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என இந்தியா கணக்கெடுத்தது. இதன் பின்னர் கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின் போது எவரெஸ்ட் மலைப்பகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பனிச்சரிவு, பனிப்புயல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டன. இதனால் மலையேறும் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது மலையேறும் பயிற்சி மீண்டும் துவக்கியுள்ள நேபாளம், அதன் உயரத்தை மீண்டும் அளக்க முடிவு செய்துள்ளது. இதற்காக செலவையும் நேபாளமே ஏற்றுக் கொள்கிறது. அதே நேரத்தில் இந்திய கடல் மட்டத்தில் இருந்தே எவரெஸ்ட் மலையின் உயரம் கணக்கிடப்படும் என நேபாள சர்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
error: Content is protected !!