‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ஹாப்பி பர்த் டே!

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ஹாப்பி பர்த் டே!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து இங்குள்ள பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோப மடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற பத்திரிகையினைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந் தோறும் புதன் கிழமை களில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆரம்பத்தில் ஆங்கிலப் பத்திரிக்கை களின் போக்கைக் கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.

1887 இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார்.

1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர் ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள்.

தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. நீதிக் கட்சியின் தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர்,சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து அதை கடுமையாக எதிர்த்தது.

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் அரசுக்குஎதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது.

1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது

error: Content is protected !!