மக்களிடம் பணப்புழக்கம் ரூ.18.5 லட்சம் கோடி ஆனது

மக்களிடம் பணப்புழக்கம் ரூ.18.5 லட்சம் கோடி ஆனது

இந்தியாவில், பணப்புழக்கம் ரு18.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ரூபாய் தடைக்குமுன்பு இருந்ததைவிட இரு மடங்குக்கும் மேல் அதிகமாகி விட்டது.

இது பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட 2016 நவம்பர் 8ம் தேதிக்கு முன்னர் மக்களிடம் இருந்த பணப்புழக்கம் ரூ.7.8 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் இப்போது அதை விட இரு மடங்குக்கும் அதிகமாக அதாவது ரூ.18.5 லட்சம்கோடி அளவுக்கு மக்களிடம் பணப்புழக்கம் உயர்ந்துள்ளது.

அதே சமயத்தில் ரிசர்வ் வங்கியால் சுற்றுக்கு விடப்பட்டமொத்த பணப்புழக்கம் அப்போது ரூ.8.9 லட்சம்கோடியாக இருந்தது தற்போது 19.3 லட்சம். கோடியாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளில் 95 சதவீத பணம் மக்களின் புழக்கத்தில் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில பகுதிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது, செயற்கையான பணத்தட்டுப்பாடு சிலரால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!