ஆஸ்திரேலிய வீரர் தன் மனைவி வினி-க்கு இந்திய முறைப்படி வளைகாப்பு!.

ஆஸ்திரேலிய வீரர் தன் மனைவி வினி-க்கு இந்திய முறைப்படி வளைகாப்பு!.

.ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின் பவுலராக இருப்பவர் மேக்ஸ்வெல் . இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.மேக்ஸ்வெல்லும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்ட நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் ஆஸ்திரேலிய முறைப்படி ஒருமுறை மற்றும் இந்திய பாரம்பரிய முறைப்படி ஒருமுறை என விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வினி ராமனுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் மேக்ஸ்வெல்-வினி ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!