தாய்லாந்து இளவரசியின் அரசியல் ஆசைக்கு அந்நாட்டு அரசர் ஆப்பு!

தாய்லாந்து இளவரசியின் அரசியல் ஆசைக்கு அந்நாட்டு அரசர் ஆப்பு!

தாய்லாந்து இளவரசி உபோல்ரதனா பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட ஆயத்த மாகும் நிலையில் ‘அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம் பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது. எனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும்’ என்று கூறி அவரது இளைய சகோதரரும் தாய்லாந்து அரசருமான மகா வஜ்ரலாங் கார்ன்  சொல்லி இருக்கிறார்.

தாய்லாந்தில் வரும் மார்ச் மாதம் பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் தாய் லாந்தில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிரான தாய் ரக்ஷா சார்ட் கட்சி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி உபோல்ரதனாவை தங்கள் பிரதமர் வேட்பாளராக நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு தாய்லாந்து முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்தில் 1932ம் ஆண்டு அரசியல மைப்பு நிறுவப்பட்டது முதல் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட்ட தில்லை.

எதிர்க்கட்சியின் இந்த அறிவிப்பு அரச குடும்பத்தின் பாதுகாவலர்கள் என கூறிக்கொள்ளும் ராணுவத்திற்கு பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளவரசி தேர்தலில் போட்டியிட்டால் அது ராணுவத்தின் ஜுண்டா ஆட்சிக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த பரபரப்பு அனைத்து ஒரே நாளில் அடங்கிவிட்டது. இளவரசி உபோல்ரதனாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு தாய் ரக்‌ஷா சார்ட் கட்சிக்கு அரசர் மகா வஜ்ரலாங்கார்ன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது சகோதரி அரசியலில் ஈடுபடும் முடிவு தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கோன் ‘முறையற்றது’ என்று கூறியுள்ளார். 67 வயதாகும் உபான்ராட் மகிதூன் அரசியலில் ஈடுபட்டால், பாரம்பரியமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் மன்னர் குடும்பத்தின் வழக்கம் இத்துடன் முறிவைச் சந்திக்கும். “அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம்பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது. எனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும்,” என்று மன்னர் வஜ்ராலங்கோன் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் இளவரசி தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.

தாய்லாந்து சட்டப்படி அரசரின் முடிவே இறுதியானது. எனவே அரசரின் எதிர்ப்பை தொடர்ந்து தாய் ரக்‌ஷா சார்ட் கட்சி தன் அறிவிப்பை திரும்ப பெற்றது.

Related Posts

error: Content is protected !!