பணிபுரியும் மகளிருக்கென தமிழக அரசின் சிறப்பு விடுதிகள்!

பணிபுரியும் மகளிருக்கென தமிழக அரசின் சிறப்பு விடுதிகள்!

ந்தியாவை பொறுத்தவரை கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று தமிழ்நாட்டிலும் மகளிருக்கென பிரத்யேக தங்கும் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது.. ஆம்.. வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 11 மகளிர் தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில் மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம். தேவைப்படுவோர் www.tnwwhcl.in என்கிற இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான உதவி தொலைபேசி 94999 88009 என்ற எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுதிகளில் அறை தேவைப்படும் மகளிர் இந்த தொலைபேசி எண்ணையோ அல்லது இணையதளம் மூலம் தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும் செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கடந்த 13ந்தேதி (ஜூலை 2023) திருச்சியில் கட்டப்பட்டுள்ள பணிக்கு செல்லும் மகளிருக்கான அரசு தங்கும் விடுதியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பணித்திறனில் பெண்களின் பங்களிப்பு இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவையாக உள்ளது. இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகளை பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது என தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் என மகளிர் இவ் விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற மகளிருக்கான பிரத்யேக விடுதிகள் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

மகளிர் தங்கும் விடுதியில், 24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம்.

www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களை காணலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!