கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி-யாக. சுப்ரியா சுலே தேர்வு!

கடந்த  பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி-யாக. சுப்ரியா சுலே தேர்வு!

அண்மையில் நடந்து முடிந்த 16-வது பார்லி. லோக்சபா எம்.பி.க்களில் மஹாராஷ்ரா மாநில எம்.பி.க்கள் சிறந்த எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ப்ரைம் பாயின்ட் பவுண்டேசன் என்ற அமைப்பு பார்லி. லோக்சபா எம்பி.க்களின் செயல்பாடுகள், விவாதம் நடத்துதல், கேள்வி கேட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த எம்.பி.க்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 16-வது பார்லி. லோக்சபாவின் 2018 பட்ஜெட் கூட்டத்தொடர் வரையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் முதல் மூன்று எம்.பி.க்கள் சிறந்த எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே ( 74 முறை விவாதம் , 16 தனிநபர் மசோதா கொண்டு வந்தது, 983 கேள்விகள்) என 1,073 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் சிவசேவனா கட்சியின் சிராங்க் அப்பா பார்னே 102 முறை விவாதம், 16 தனிபர் மசோதா, 932 கேள்விகள் ) என 1,050 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், காங். எம்.பி.யான ராஜிவ் ஷங்கரராவ் (97 விவாதம், 15 தனிநபர் மசோதா, 919 கேள்விகள்) என 1,031 புள்ளி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

2018-ம் பட்ஜெட் கூட்டத்தொடர் வரையில் கேட்கப்பட்டுள்ள மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 723 கேள்விகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 46 எம்.பி.க்கள் 22,705 கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 38 எம்.பி.க்கள் 13, 950 கேள்விகள், உ.பி.யைச் சேர்ந்த76 எம்.பி.க்கள் 11,268 கேள்விகள் எழுப்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!