ஐந்தே நிமிடங்கள் கூடி கலைந்த இலங்கை நாடாளுமன்றம்!

ஐந்தே நிமிடங்கள் கூடி கலைந்த இலங்கை நாடாளுமன்றம்!

அன்றாடம் வேறு வேறு காட்சிகள் அரங்கேறும் இலங்கை நாடாளுமன்றம் இன்று மதியம் தொடங்கிய நிலையில் 5 நிமிடத்தில் அமர்வு முடிவடைந்து விட்டது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அப்பதவியி லிருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை புதிய பிரதம ராக அதிபர் சிறிசேனா அண்மை யில் நியமித்தார்.ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பலத்தைப் பெற்றிருக்கும் ரணில், பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளு மன்ற கலைப்பு, அதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை என அடுத்தடுத்த அரசியல் நாடகங்கள் இலங்கையில் அரங் கேறின. இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக் கையில்லா தீர்மானம் இரு தினங் களுக்கு முன்பு கொண்டு வரப் பட்டது. இதில் ராஜபக்ச தோல்வி யடைந்தார்.

ஆனால், இந்த வாக்கெடுப்பில் குளறுபடிகள் நடந்ததாக ராஜ பட்சவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பு நடைபெற் றது. இதிலும் ராஜபக்சவுக்கு தோல்வியே கிடைத்தது.

இந்த நிலையில், தற்போது இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவை அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் விதிமுறை கள் முறையாக கடைப்பிடிக்க வில்லை எனவும் சிறிசேனா குற்றம் சாட்டி உள்ளார். இதுபோன்ற சூழ்நிலை காரணமாக, இலங்கை அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் ராஜபக்‌ஷே மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று கருதப்பட்டதால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்குக் கூடியது. சபாநாயகர் கரு ஜெயசூரியா நாடாளுமன்றத்திற்கு இன்று வராத நிலையில், துணை சபாநாயகர் அனந்த குமாரசிறி தலைமையில் அமர்வு தொடங்கியது. அப்போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பெரும்பான்மை, அரசாங்கத்துக்குத் தேவையென, சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, தினேஸ் குணவர்தனவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதவர்களால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாதெனக் கூறினார்.

இதையடுத்து அவையை ஒத்திவைப்பதாக அறிவித்த துணை சபாநாயகர் அனந்த குமாரசிறி, 23ஆம் தேதி காலை 10.30க்கு மீண்டும் அவை கூடும் என்று தெரிவித்தார். இன்றைய அமர்வு 5 நிமிடங்கள் வரை மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் , “ பெரும்பான்மை இல்லாத ஒருவர் நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவியில் இருக்க முடியாது. இது ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயலாகும். இதனை உணர்ந்து ராஜபக்‌ஷே தனது பதிவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

2 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அதனை அதிபர் குறை கூறி வந்தார். இன்று மூன்றாவது முறையாக குரல் வாக்கெடுப்பிற்கு நாங்கள் அழைத்தபோது அதையும் நிராகரித்துவிட்டார். பெரும்பான்மை இல்லாதபோது அரசு நிதியை ராஜபக்‌ஷே பயன்படுத்தி வருகிறார். இது தொடர்பாகவும் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது. வரும் 29ஆம் தேதி இது தொடர்பாக விவாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!