தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க ‘ஒரு மீட்டர் தொப்பி’- சீனா அறிமுகம்

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க ‘ஒரு மீட்டர் தொப்பி’- சீனா அறிமுகம்

உலக நாடுகளை முடக்கிப் போட்டுள கொரோனா’ தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பால், காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பணிகளுக்கு மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப் பட்டுள்ளது. தொற்று பரவாமல் தடுக்க, கடைகளுக்கு வரும் பொதுமக்கள், முக கவசம் அணிந்து வர வேண்டும்; ஒன்றரை மீட்டர் சமூக இடைவெளி பராமரிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதற்காக, உழவர் சந்தை, கடைகளில் கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியில் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில், குடை பிடித்து வர வேண்டும் என்று பல்வேறு மாநில அரசு வலியுறுத்தும் நிலையில் சீனாவில் பள்ளிக் குழ்ந்தைகள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க’ ஒரு மீட்டர் தொப்பி’ அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

முதலில் தொற்று ஆரம்பித்த வுஹான் மாகாணத்தில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பிவிட்ட நிலையில். ஷாங்காய், குவாங்ஸ்ஹவ் (Guangzhow),பீய்ஜிங் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்துக் கல்வி நிலையங்களும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு இலவசமாக முகக் கவசம் அளித்தல், வளாகத்தை கிருமிநாசியால் சுத்தப்படுத்துதல், தனிமைப்படுத்தும் பகுதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கு முடிந்த பின்பு நம்முடைய பாதுகாப்பு பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கின்றது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு. இந்த நிலையில், இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியம்தான் என்று சீனப் பள்ளிக் குழந்தைகள் நிரூபித்துள்ளனர். அந்த வகையில் மூன்று மாத ஊரடங்கிற்குப் பிறகு சீனக் குழந்தைகள் பள்ளிக்குத் தற்பொழுது திரும்பியுள்ளனர். அவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க’ ஒரு மீட்டர் தொப்பி’ அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

குழந்தைகள் வகுப்பறையில் அமர்ந்தமாறு வெளியாகியுள்ள காணொலியில், முகக் கவசத்துடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு மீட்டர் தொப்பியுடன் அமர்ந்துள்ளனர். ஒரு மீட்டர் தொப்பி என்பது சாதாரணமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட தொப்பியுடன் இருபக்கமும் குச்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த ஒரு மீட்டர் தொப்பி யோசனை முதலில் சீனாவில், ஸிஹிஜியாங் (zheijiang) மாகாணத்தில் ஹேங்குவாவில் உள்ள யாங்சியாங் ஆரம்ப பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு பயிலும் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் தங்கள் பெற்றோர் உதவியுடன் இந்தத் தொப்பியைத் தயாரிக்க அறிவித்திருந்த நிலையில் தற்போது குழந்தைகள் தாங்கள் தயாரித்த தொப்பியுடன் பாடம் பயில்கின்றனர். இந்தத் தொப்பி அணிந்து இருப்பதால் மாணவர்கள் தங்கள் சக மாணவர்களிடம் நெருங்கிப் பழக முடியாது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க இது ஒரு சிறந்த வழியாக உள்ளது.

அந்தப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஹாங் ஃபெங் கூறுகையில், இது எங்கள் சொந்த கற்பனை முடிவாகும். அந்தத் தொப்பி அணிவதன் மூலம் எங்களுடைய கோட்பாட்டை நாங்கள் பின்பற்றுகிறோம். `ஒரு மீட்டர் தொப்பி அணிந்து, ஒரு மீட்டர் தள்ளி இருப்போம்’ என்று அவர் கூறுகிறார்.

error: Content is protected !!