சீமான் ஆகிய நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டி! முழு விபரம் +- வீடியோ

நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர்கட்சி தனித்து போட்டியிடுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் நேற்று சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து வேட்பாளர்களும் ஒரே மேடையில் சீமான் முன்னிலையில் அணிவகுத்து நின்றனர். மேலும் இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது சீமான் ஆகிய நான் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுகிறேன் என்று அறிவித்தார். மேலும் யார் யார் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்றனர் என்ற பட்டியல் இதோ:.
இதையடுத்து சீமான் பேசும் போது, “நாட்டில் ஊழல் கட்சிகள், மதவாத கட்சிகளுக்கு எதிராக புரட்சிகரமான அரசியல் போரினை நாங்கள் தொடங்கியுள்ளோம். நாங்கள் விரும்பும் மாற்றத்தை எங்களிடம் இருந்தே தொடங்கியிருக்கிறோம். அநீதிகளின் கட்டமைப்பாக சமூகம் இருப்பதால் ஊழலைஒழிக்க முடியவில்லை. அதனால்தான் 3 அல்லது 4 சீட்டுகளுக்காக இல்லாமல், ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு எனக்கு இந்த நாடு தேவை. தற்காலிக வெற்றிக்கு நிரந்தர வெற்றியைப் பலி கொடுக்க நான் விரும்பவில்லை.
அனைத்து உயிர்களுக்கான அரசியல் செய்யவே நாங்கள் வந்திருக்கிறோம். தமிழகத்தில் லாபம் ஈட்டும் தொழிலாக, குடும்பத்தின் சொந்த சொத்தாக அரசியல் மாற்றப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி அவற்றுக்கு எதிர்திசையில் பயணிக்கிறது. புதியதொரு தேசம் செய்வோம் என்ற முழக்கத்துடன் பயணிக்கிறோம்.
வேட்பாளர்கள் தேர்வில் ஆண், பெண்ணுக்கு சமஉரிமை அளிப்பது பிறவிக் கடமை. சமூகப் பொறுப்பு. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை. எங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டதால்தான், நாடாளுமன்றத்தில் 17 லட்சம் பேர் எங்களுக்கு வாக்களித்தனர். இத்தேர்தலில் எங்களை வெற்றி பெறச் செய்தால் 5 ஆண்டுகளில் தமிழகத்தை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் சாதனை படைப்போம். தரமான, இலவச கல்வி, மருத்துவம் அளிப்போம். பல கோடி பனைத்திட்டம், வேளாண் பணிகள் அனைத்தும் அரசுப் பணிகளாக அறிவிக்கப்படும்.
டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதற்குப் பதிலாக மக்களுக்கு பனம்பால், தென்னம்பால், மூலிகைச் சாறு வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவோம். உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளை நாங்கள் வாழ வைப்போம். அரசுப் பள்ளிகள், கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்கும் நிலை உருவாக்கப்படும்.
எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்,முதல்வர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும். அனைவரும் அரசு மருத்துவமனை யில்தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்படும்.
சுற்றுச்சூழலைப் பாதிக்காததொழிற்சாலைகள் தொடங்கப்படும். தமிழ் வழியில் படித்தால்தான் வேலை என்று நிலை நிச்சயம் கொண்டு வரப்படும் “என்றார்.