SGFI நடத்தும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு சேலம் மாணவி மற்றும் மாணவன் தேர்வு!

SGFI நடத்தும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு சேலம்  மாணவி மற்றும் மாணவன் தேர்வு!

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியில் நடைபெற்றது.இதில் சேலம் எம்ராடுவேலி பள்ளியைச் சேர்ந்த மாணவி மகிதா பங்கு பெற்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதேபோன்று ஐசிஐசிஐ பள்ளிகளுக்கு இடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சேலம் ஜே.ஆர். கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயிலும் பிரணவ் என்ற மாணவன் பங்கு பெற்று தங்கம் வென்று உள்ளார்.

சிபிஎஸ்சி மற்றும் ஐசிஐசிஐ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சேலத்தைச் சேர்ந்த இருவரும் தங்க பதக்கம் பெற்றதைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் SGFI ( school games federation of india ) நடத்தும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேறக நேரடியாக தேர்வாகி உள்ளனர்.

Sgfi நடத்தும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க சேலத்தில் இருந்து முதல் முறையாக தேர்வாகி செல்லும் மாணவி மகிதா மற்றும் மாணவன் பிரணவுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பயிற்சியாளர்கள் பிரபாகரன், சத்யா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!