காஷ்மீரிலேயே எடுக்கப்பட்ட “ சாலை” – மூவி ஸ்டில்ஸ்
முகிலன் சினிமாஸும் தங்கத்துளசி புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். ‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா(KRISHA) ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.’ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்றுள்ளனர்.
‘சாலை’ படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெரும் பனிப்பொழிவு கொட்டும் காலத்தில் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டு முழுப்படத்தையும் படமாக்கியுள்ளனர்.











