லட்சத்தீவு- சர்வதேச ஸ்தலமாக மாற்ற ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு முடிவு!.

லட்சத்தீவு- சர்வதேச ஸ்தலமாக மாற்ற ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு முடிவு!.

ரபிக் கடலில் அமைந்துள்ள லட்சத்தீவு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்வையிட்டதாகப் பகுதிகளில் ஒன்றாகும். உலக நாடுகளைச் சுற்றி வருவோர் கூட நமது லட்சத்தீவுக்கு சென்றிருக்க மாட்டார்கள். ஆனால், சுற்றுலா செல்ல விரும்புவோர் கண்டிப்பாகச் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று தான் இந்த லட்சத்தீவு.. இந்தியாவின் மிக அழகான மற்றும் அமைதியான இடங்களில் ஒன்று இந்த லட்சத்தீவு..!

மொத்தம் 36 தீவுகள், 12 பவளப்பாறைகள் மற்றும் மூன்று திட்டுகளைக் கொண்டதே லட்சத்தீவு.. என்னதான் இத்தனை தீவுகள் இருந்தாலும் அதில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். நகரங்களின் சலசலப்பிற்கு பிரேக்விட்டு அழகிய இடத்தில் விடுமுறையைக் கழிக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் லட்சத்தீவுக்கு செல்லலாம். லட்சத்தீவு 1956இல் நமது நாட்டின் யூனியன் பிரதேசமாக ஆனது. இப்போது இந்தியாவில் இருக்கும் எட்டு யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்றாகும்.

லட்சத்தீவில் மொத்தம் 36 தீவுகள் இருக்கும் போதும் முன்பே கூறியது போல அதில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக அதில் மினிகாய் தீவு, கல்பேனி தீவுகள், கத்மத் தீவுகள், பங்காரம் தீவு மற்றும் தின்னகர தீவு ஆகியவை பிரபலமான சுற்றுலா இடங்கள்.ஆனாலும், இங்கு மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி கிடையாது.

இப்பேர்பட்ட லட்சத்தீவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அழகிய கடற்கரையை கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 3,600 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லட்சத்தீவு . அங்குள்ள ஆந்த்ரோத், கல்பேனி மற்றும் கடமத் தீவுகளில் துறைமுக வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. முக்கியமாக துறைமுகம் மற்றும் நீர்வழிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

உள்நாட்டு சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில், லட்சத்தீவின் பிற தீவுகளில் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பிப்ரவரி 2ம் தேதி லட்சத்தீவுக்கு சென்றார். பின்னர், இந்த புகைப்படங்கள் பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், லட்சத்தீவுகள் இணையத் தேடல்களில் முன்னணியில் இருந்தது.

இதனிடையே மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சி இது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக மலாத் தீவில் விடுமுறையைக் கழிக்கும் பல இந்தியர்கள் இப்போது லட்சத்தீவுக்குச் செல்லும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியர்களும் மாலத்தீவு செல்வதை தவிர்க்கப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!