பிரிட்டனின் ஃபைனான்ஸ் மினிஸ்டரானார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்!

பிரிட்டனின் ஃபைனான்ஸ் மினிஸ்டரானார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்!

தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தில் அரசியல்வாதியாகவும் செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில்,   ரிஷி சுநாக் பிரிட்டனின் நிதிஅமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜாவித் பிரிட்டனின் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ராஜினாமா செய்த காரணத்தினால் புதிய நிதி அமைச்சராக ரிஷி தேர்வு செய்யப் பட்டுள்ளார். 39 வயதாகும் ரிஷி நிதி அமைச்சராக பதவி ஏற்றதும் பிரிட்டன் பிரதமர் வசிக்கும் 10, டவுணிங் தெரு இல்லத்திற்கு அருகில் உள்ள 11ம் எண் வீட்டில் குடியேறுவார்.

பிரிட்டனில் பிரதமர் பதவிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் உள்ள பதவி நிதி அமைச்சர் பதவி என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரிட்டனின் நிதியமைச்சராக ரிஷி தேர்வு செய்யப்பட்டு இருப்பதை பிரிட்டன் ராணி அங்கீகரித்து விட்டார்.

பிரிட்டனில் ரிச்மோண்ட் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஷி. 2015ஆம் ஆண்டில் தான் அவர் முதன்முதலாக பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் அடுத்த 5 ஆண்டுகளில் பிரிட்டனின் நிதியமைச்சராக பொறுப்பேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷியின் அப்பா ஒரு அரசு மருத்துவர். அவரது அம்மா ஃபார்மசிஸ்ட் பட்டதாரி மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

நாராயண மூர்த்தியின் மகள் அகஷதாவை ரிஷி திருமணம் செயதுள்ளார்.

ரிஷி 100 கோடி பவுண்டுகள் முதலீட்டில் சிறு தொழில் முதலீட்டுக்கு உதவுகிற நிதி நிறுவனம் ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் கட்டாயம் விலக வேண்டும் என்பது ரிஷியின் ஆணித்தரமான நம்பிக்கை. பிரிட்டனின் 94% மக்களுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இந்த நிலையில் பிரிட்டன் குடிமக்கள் அனைவரும் ஐரோப்பிய யூனியன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் அநியாயம் என்பது ரிஷியின் வாதம். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதும் பிரிட்டனின் தொழில்துறை வளர்ச்சி சிறப்பாக அமையும் என்பது ரிஷியின் மதிப்பீடு,

error: Content is protected !!