இப்போதைக்கு லாக் டவுன் தளர்வுகள் மட்டுமே தேவை!

இப்போதைக்கு லாக் டவுன் தளர்வுகள் மட்டுமே தேவை!

கொரோனா.. போதும் சாமி.. எடப்பாடி சாமி. டெஸ்ட்டை அதிகமாக்க அதிகமாக்க தொற்று எண்ணிக்கையும் அதிகமாகத்தான் தெரியவரும். கேரளா உள்பட அண்டைமாநிலங்களில் டெஸ்ட் குறைவாக இருந்தது. அதனால் ஏதோ கட்டுப்படுத்தி விட்டமாதிரி சீன் போட்டார்கள்..இப்போது அவர்களும் அலறுகிறார்கள்.

இன்னைய தேதிக்கு ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் எட்டுகோடி பேருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டால் ஒரு கோடி பேருக்காவது பாதிப்பு இருக்கும்.. ஒரு நாளைக்கு லட்சம்பேர் அட்மிட் ஆனால் அதே லட்சத்துக்கு முன்னே பின்னே டிஸ்சார்ஜ் என்பதும் இருக்கும்.

இதற்கு மேலும் வெறும் நம்பர்களை துரத்திக் கொண்டிருந்தால், சர்வ நாசம்தான்.. இன்னொரு பக்கம் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்கள் கடும் மன அழுத்தத்திற்கும் தரை மட்ட பொருளாதா ரத்திற்கும் தள்ளப்படுவார்கள். கொரோனாவில் விழுந்தாலாவது எட்டு நாளில் வெளியேவந்து விடலாம். பட்டினிச்சாவு, தற்கொலைகள் ஆரம்பித்தால் சொல்லவேண்டியதேயில்லை..

மாவட்டங்களை கலக்கவிடாமல் இனிமேலும் அடைத்து வைத்தால், உள் மாவட்ட வியாபாரம், தொழில்கள் எதுவும் போதிய பலனை தராது. மாவட்ட ஆட்சியர்கள் தாசில்தார்கள், முனிபல் கமிஷனர்கள்ள்,, காவல் துறை அதிகாரிகள் போன்றோர். குறுநில மன்னர்கள்போல் அவர்கள் இஷ்டத்திற்கு ஆதிக்கம் செலுத்துகின்றார்.

நிலைமையை பார்த்தால், தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் மாநில அரசின் நேரடி கட்டுப் பாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகமே மேலோங்குகிறது. நடமாட்ட சுதந்திர முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்தாலே தமிழக மக்கள் பெரும் நிம்மதி அடைவார்கள்.. இந்த அரசு திரும்ப திரும்ப மக்களிடம் வலியுறுத்த வேண்டியது,சமூக இடைவெளி மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை பற்றித்தான்.

பழையபடி லாக்டவுனை தளர்த்தினால் என்னவாகும்.?

மக்கள் நடமாட்டம் அதிகமாகும் தொழில்கள், வியாபாரங்கள் நிமிர ஆரம்பிக்கும். நோய் தொற்றும் அதிகமாக பரவும். ஆனால் அது தவிர்க்கவே முடியாதது.. எல்லாமே மக்கள் கையில்தான் உள்ளது..கணிசமான காலம் கழித்து மீண்டும் லாக்டௌன் போட நேரிடலாம். ஆனால் அதற்கிடைப்பட்ட காலத்தில் லாக் டவுன் தளர்வுகள் நிச்சயம் தேவை.. நாலு மாதங்களுக்கு மேலும் இன்னும் கொஞ்சம் மூச்சை இறுக்கிப்பிடித்துக்கொள்ளுங்கள் மக்களே என்று சொன்னால், ஒரேயடியாக போய் சேரவேண்டியதுதான்.

நமது சிற்றறிவுக்கு எட்டியதை சொல்லிவிட்டோம்.

ஏழுமலை வெங்கடேசன்

Related Posts

error: Content is protected !!