32°C
விளம்பரம்
Advertisement

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 545 லோக்கல் பேங்க் ஆபிசர் வேலை வாய்ப்பு!

admin சேலம் Published: July 23, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) காலியாக உள்ள 545 லோக்கல் பேங்க் ஆபிசர் (Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்களின் விவரம்

நாடு முழுவதும் மொத்தம் 545 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாநில வாரியான காலியிடங்கள்:

  • தமிழ்நாடு: 51

  • ஆந்திரப் பிரதேசம்: 04

  • தெலுங்கானா: 41

  • கர்நாடகா: 78

  • மகாராஷ்டிரா: 67

  • குஜராத்: 77

  • மேற்கு வங்கம்: 80

  • அசாம்: 85

  • திரிபுரா: 18

  • ஜம்மு & காஷ்மீர்: 09

  • மேகாலயா: 08

  • மணிப்பூர்: 06

  • மிசோரம்: 05

  • நாகாலாந்து: 05

  • சிக்கிம்: 05

  • அருணாச்சலப் பிரதேசம்: 04

  • லடாக்: 02

தகுதி மற்றும் அனுபவம்

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.

  • பணி அனுபவம்: ரிசர்வ் வங்கியின் அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கி அல்லது ஊரக வங்கிகளில் (Scheduled Commercial Banks / RRBs) குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் அவசியம்.

வயது வரம்பு (01.07.2026 தேதியின்படி)

  • குறைந்தபட்ச வயது: 20 ஆண்டுகள்

  • அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்

  • வயதுத் தளர்வு: அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதிய விவரம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Test)

  • உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Test)

  • நேர்முகத் தேர்வு (Interview)

விண்ணப்பக் கட்டணம்

  • பொது / பிற பிரிவினர்: ரூ.1,180

  • SC / ST / PWD பிரிவினர்: ரூ.50

விண்ணப்பிக்கும் முறை

  1. PNB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (pnb.bank.in) சென்று Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.

  2. “RECRUITMENT OF LOCAL BANK OFFICERS UNDER HRP 2026-27” என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. Apply Online என்பதைத் தேர்வு செய்து, முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள் பதிவு (Registration) செய்து கொள்ளவும்.

  4. பெறப்பட்ட Registration Number மற்றும் Password மூலம் உள்நுழைந்து, கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாக நிரப்பவும்.

  5. தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, ஆன்லைன் வழியில் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

முக்கிய தேதிகள் & இணைப்புகள்

  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 09.08.2026

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: pnb.bank.in

  • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு: ibpsreg.ibps.in/pnbjul26

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்