நிஜம்.. ப்ரியா கல்யாணராமன் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டார்..!

நிஜம்.. ப்ரியா கல்யாணராமன் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டார்..!

ன்றையை பிற்பகல் இப்படி சிதைய வைக்குமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.. மூன்றரை மணிவாக்கில் போனில் வந்த சேதியை நம்ப மனசு மறுத்தது..!

ஆனால் நிஜம் ப்ரியா கல்யாணராமன் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டார்..

குமுதம் அலுவலகத்தையும் தாண்டி சகல இதழ் ஜாம்பவான்களையும் நேரடி தொடர்பில் வைத்திருந்தவர் ப்ரியா கல்யாணராமன்.. என்னை போன்றோர் வாரம் ஓரிரு கட்டுரைகள் தயார் செய்வதையே இமாலய சாதனை போல் பீத்திக் கொள்ளும் மனநிலையை சுக்குநூறாக உடைத்தவரிவர்..

வாரந்தோறும் குமுதம் இதழை -அதன் மார்க்கெட் தரத்துக்கு ஏற்ற வண்ணம் தயார் செய்வதில் தொடங்கி, தீராநதி என்னும் இலக்கிய இதழ், பக்தி இதழ், கல்கண்டு மட்டுமின்றி சிநேகிதி இதழ் பணிகளையும் முழுமையாக பொறுப்பேற்று நேரந்தவறாமல் அச்சுக்கு அனுப்பி விநியோகிக்க அவர் செய்யும் சாகச வித்தை சுட்டு போட்டாலும் எவருக்கும் வராது.. அதிலும் முன்னொரு காலத்தில் ராகி, ஜராசு, புனிதன், என்ற மூன்று ஜாம்பவான்கள் செய்த வேலையை இவர் ஒருவரே திறம்பட செய்யும் திறமையை குமுதம் வரதராஜன்-தான் கண்டறிந்து தட்டிக் கொடுத்து வேலைவாங்கினார் என்பது தனி எபிசோட்

அதற்காக இந்த ப்ரியா கல்யாணராமன் என்ற பிரகாஷ் என்றும் அழைக்கப்பட்ட ராமச்சந்திரன் என்ற ஆசிரியர் பக்தி கதை எழுதிக் கொண்டிருக்கும்போதே நயன்தாரா அழகை வர்ணித்து உருவானக் கட்டுரைக்கு உரிய தலைப்பு வைத்து லே அவுட்-டுக்கு ஐடியா கொடுப்பார்..

மறு நாள் ஜெயமோகன் குறித்து பிளாக்-கில் வந்த ஒரு கட்டுரைவாசியை பிடிக்க எத்தனித்துக் கொண்டிருப்பார்..

அடுத்த நாள் சிநேகிதி டீம் எந்த ஊரில் என்ன செய்ய வேண்டும் என்பதை பாடம் நடத்துவார்..

அதே சமயம் எஸ் ஏ.பி.பாணியில் தன்னை பற்றி பேட்டி உள்ளிட்ட எந்த தகவலையும் பரிமாறாதவரிவர்.. ஆனால் இப்படி அடுத்தடுத்த பணியால் விளைந்ததே இவரின் மரணம் என்பதை சுட்டிக் காடியே ஆக வேண்டும்

நம் ஆந்தை குரூப்-களில் வரும் சேதிகளை உடனுக்குடன் (முதல் மூன்று நிமிடங்களில்) படிக்கும் முதன்மையானவர் பட்டியலில் இருக்கும் ..ஸாரி .. இருந்த பிரியா கல்யாணராமன் அன்றாடம் ஏதாவது ஒரு விசயத்தை உறுதிப்படுத்த கால் செய்து விடுவார்.. !

இது வரை எத்தனையோ செய்திகளை பகிர்ந்து அதிர்ச்சி என்ற சொல்லை இணைத்து பகிர்ந்த எனக்கு இன்று இவர் காலமான செய்தியைக் கேட்டதும் பாதித்த அதிர்ச்சி இன்னும் தீரவில்லை..அவர் உடலை எப்படி காண முடியும்..!

போய் வாருங்கள் சார்.. 🙏

அன்னாரின் இல்ல முகவரி:

10,A ,ரஜினி ராஜா கோயில் தெரு, ஐந்தாவது சர்க்குலர் சாலை, ஜவஹர் நகர், பெரம்பூர்,சென்னை- 82

கட்டிங் கண்ணையா

error: Content is protected !!