3600 கோடியில் உலகின் மிக உயரமான சத்ரபதி சிவாஜி நினைவிடம்: – 24ம் தேதி மோடி அடிக்கல்
மும்பையின் அரேபியக் கடலில் மாமன்னன் சத்ரபதி சிவாஜி நினைவிடத்தை 3600 கோடி ரூபாய் செலவில் மகாராஷ்டிரா அரசு அமைக்கவுள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் 210 மீட்டர உயரத்தில் அரபிக் கடற்கரையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் இந்த நினைவிடம் அமையவிருக்கிறது.
இந்த நினைவகத்தில் இந்து மத தத்துவங்கள் சிவாஜி யின் சாதனைகள் விளக்கும் வகையில் அரங்கங் கள் அமைக்க ப்படவுள்ளது.மொத்தத்தில் பாரத பண்பாட்டினை பார் எங்கும் எடுத்து செல்லும் வகையில் இந்த நினைவகம்அமைய உள்ளது. இந்த நினைவகத்தில்192 மீட்டர் உயரத்தில் கடலில் சிவாஜி குதிரையில்அமர்ந்து இருக்கும் பிரமாண்டமான சிலைஅமைக்கபடுகிறது.இந்த சிலை உருவான பிறகு உலகிலேயே உயரமான முதல் சிலையாக சிவாஜியின் சிலையே வரலாற்றில் நிலைத்து இருக்கும். இதற்கு முன்பு குஜராத்தில் நர்மதா நதிக் கரையில் சர்தார் சரோவர் அணை அருகே 182 அடி உயரத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வல்லபாய் படேலின் சிலை நிறுவபட்டு விட்டால் வல்லபாய் படேல் சிலை வடிவில் உலகில் முதல் இடத்தில் இருப்பார்.
சிவாஜியோ படேலோ யாராக இருந்தாலும் இன்னும் மூன்று வருடங்களில் உலகில் உயர்ந்த சிலையாக நிற்ப்பார்கள். தற்பொழுது உலகில் உயர்ந்த சிலையாக 153 மீட்டர் உயரத்தில் சீனாவில் உள்ள ஸ்ப்ரிங் டெம்பிலில்உயர்ந்து நிற்கும் புத்தர் சிலையே இன்று வரை உலகில் உயர்ந்த சிலையாக உள்ளது. அடுத்து மியான்ம ரில் லேக் யுன் செக்யா என்கிற இடத்தில் 130 உயரத்தில் உயர்ந்து நிற்கும் புத்தர் சிலை.
தற்போது உலகிலேயே உயரமான சிவாஜி சிலை அடுத்து படேல் சிலை அமைக்கபட்ட பிறகு சீனாவில் உள்ள புத்தரும் பர்மாவில் உள்ள புத்தரும் 3 வது4 வது இடத்துக்கு சென்று விடும். தற்போதைக்கு மொத்தமாக இந்த நினைவிடத்தை உருவாக்க 3600 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா வருகின்ற டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்ரபதி சிவாஜிக்கு நினைவிடம் அமைப்போம் என மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.