பாகிஸ்தானில் வரி வசூல் அமோகம் – எப்படி தெரியுமா?

பாகிஸ்தானில் வரி வசூல் அமோகம் – எப்படி தெரியுமா?

பாகிஸ்தானில் அரசின் வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வெளிநாட்டில் சொத்து வைத்துள்ளவர்கள தங்களது வெளிநாட்டுச் சொத்துகள் பற்றித் தெரிவிக்க அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் ரூ.8,000 கோடி வரி வசூலானதாக அந்நாட்டு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு அறிவித்த பொதுமன்னிப்புத் திட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வெளிநாட்டு டெபாசிட்டுகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.8 ஆயிரம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

முழு விவரங்களும் இன்னும்வருவானவரி இலாகா தலைமையகத்துக்கு இன்னும் வந்து சேராத காரணத்தால் , வசூலாகும் வரித்தொகை இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கராச்சியை சேர்ந்த கோடீஸ்வரர் ஹபிபுல்லா கான் மட்டும் , வெளிநாட்டில் 1.25 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர் மெகா குழுமங்களின் நிறுவனர் ஆவார்.

மத்திய வருவாய் துறைத் தலைவர் தாரிக் முகமது பாஷா கூறுகையில், வெளிநாட்டில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்கள் மற்றும் சொத்து சேர்த்த பல தொழிலதிபர்கள் இத்திட்டத்தின் கீழ் அவற்றை சட்டப்பூர்வமாக்கி கொள்ள முடியும் என்று கூறினார்.

இரண்டு மாத இறக்குமதிக்கு மட்டுமே தேவையான அளவுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானில் இருந்த நிலையில், அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க நவாஸ் ஷெரிப் தலைமையிலான அரசு இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் மசோதா மூலம் நிறைவேற்றியது.

முதலில், பொதுமன்னிப்பு திட்டத்தின் இறுதி நாளாக ஜுன் 30ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பொது மன்னிப்புத் திட்டத்தின் கடைசி நாளான, ஜூன் 30 ஆம் தேதி வரை மத்திய வருவாய் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் வரி வசூலாகும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய வருவாய் துறை தலைவர் தாரிக் பஷா, இத்திட்டம் மூலம் 4 பில்லியன் டாலர் வரை வரி கிடைக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!