ஓபன்ஏஐ தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் தன் சிநேகிதனான ஆலிவர் முல்ஹெரினை மணந்தார்!

ஓபன்ஏஐ தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் தன் சிநேகிதனான ஆலிவர் முல்ஹெரினை மணந்தார்!

ர்வதேச அளவில் அதிகரித்து வரும் தொழில்நுட்பாமான ஏஐ தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் தனது நீண்ட கால நண்பரான் ஆலிவர் முல்ஹெரினை ஹவாயில் ஒரு நெருக்கமான விழாவில் மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ள திருமண படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றன.ஆலிவர் முல்ஹரின் ஆஸ்திரேலிய மென்பொருள் பொறியாளர் ஆவார், ஏற்கனவே கடந்த செப்டம்பரில் நியூயார்க் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், தானும் முல்ஹெரினும் திருமணம் செய்து விரைவில் குழந்தைகளைப் பெற விரும்புவதாகக் கூறியிருந்தார் என்பதும் இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருப்பதும். குறிப்பிடத்தக்கது.

ChatGPT ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் சாம் ஆல்ட்மேன் புகழ் பெற்றார். இது தற்போது பலதுறைகளில் பலரின் வேலைவாய்ப்பைக் காலிச் செய்யும் AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான போட்டியை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியது. அத்துடன் செயற்கை நுண்ணறிவு துறையில் பல கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டன. சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வந்தவர் சாம் ஆல்ட்மேன். நிறுவத்துடன் இவர் வெளிப்படை தன்மையுடன் சரியான முறையிலு் தொடர்பில் இல்லை என்று குற்றம்சாட்டிய நிறுவனத்தின் இயக்குனர் குழு சாம் ஆல்ட்மேனை நிறுவனத்தில் இருந்து நீக்கியது. அவருக்கு பதிலாக அந்நிறுவனத்தின் மீரா முராதி சிஇஓ வாக நியமிக்கப்பட்டார். சாம் ஆல்ட்மேனின் நீக்கம் சர்வதேச அளவில் தொழில் நுட்பத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய பாய்ச்சலான் சாட் ஜிபிடி அவரது தலைமைத்துவத்தின் கீழ்தான் உருவாக்கப்பட்டது. இதனால் செயற்கை நுண்ணறிவு துறையின் மிக முக்கியமான முகமாக சாம் ஆல்ட்மேன் மாறினார். சாம் ஆல்ட்மேனின் நீக்கத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவர் கிரேக் ப்ரோக்மேன் உட்பட முக்கிய அதிகாரிகள், ஊழியர்கள் ராஜினாமா செய்தனர் நிலையில், ஓப்பன் ஏஐ நிறுனத்தின் முதலீட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓ-வாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இந்ந நிலையில், சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரேக் பரோக்மேன் ஆகிய இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவிருப்பதாக மைக்ரோசாஃப்ட் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்திருந்தார். பல தரப்பின் எதிர்ப்பை தொடர்ந்து சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் சிஇஓவாக இணைய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அந்த அறிவிப்பை சாம் ஆல்ட்மேனும் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் தான் மேற்படி  ஏஐ தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் தனது நீண்ட கால நண்பரான் ஆலிவர் முல்ஹெரினை ஹவாயில் ஒரு நெருக்கமான விழாவில் மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ள திருமண படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றன.. ஆலிவர் முல்ஹெரின் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆவார். இவர் மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றி இருக்கிறார். தற்போது ஐஓடி (IoT) எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறார்.

error: Content is protected !!