எம்.பி.க்களின் அட்டெடன்ஸ்: ஜஸ்ட் 5 எம்.பி.கள் மட்டுமே ஃபுல் டேஸ் ஆஜர்!

எம்.பி.க்களின் அட்டெடன்ஸ்: ஜஸ்ட் 5 எம்.பி.கள் மட்டுமே ஃபுல் டேஸ் ஆஜர்!

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் நம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு எம்.பி.க்களுக்கு எக்கச்சக்கமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது.

இரண்டு ஆண்டுக்கு முந்தைய அதிகாரப்பூர்வ தகவல்படி மக்களவை உறுப்பினருக்கு மாதச் சம்பளம் ரூ.16,000, மாதத் தொகுதிப்படி ரூ.20,000, மாத அலுவலகப்படி ரூ.4,000, மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000, உதவியாளர் ஊதியம் ரூ.14,000, ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 கிலோ லிட்டர் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர்நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகிறது. தொகுதியில் இருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீ லைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி.கள் பாராளுமன்றத்தில் மொத்தம் 545 பேர் உள்ளனர். இவர்களில் கடந்த 3 ஆண்டுகளில் 5 பேர் மட்டுமே 100 சதவீத வருகை புரிந்து இருக்கின்றனர். பா. ஜனதாவை சேர்ந்த பைரன் பிரசாத் மிஸ்ரா, (உ.பி.), கோபால் ஷெட்டி (மராட்டியம்), கிரித் சோலங்கி (குஜராத்), ரமேஷ் சந்தர் கவுசிக் (அரியானா) மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குல்மானி சமல் (ஒடிசா) ஆகியோர் மட்டுமே பாராளுமன்ற கூட்டம் நடந்த எல்லா நாட்களும் சபைக்கு வந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் வருகைப்பதிவு 59 சதவீதமும், துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு 54 சதவீதமும் பதிவாகி உள்ளது. எனினும் சோனியா காந்தி 4 விவாதங்களிலும், ராகுல் காந்தி 11 விவாதங்களிலும் பங்கேற்று உள்ளனர். இதில் பைரன் பிரசாத் மிஸ்ரா 1,468 விவாதம், கேள்விகளில் பங்கேற்று முதலிடத்தில் இருக்கிறார்.முலாயம் சிங் யாதவ் வருகைப்பதிவு 79 சதவீதம். ஆனால் அவருடைய மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிளிள் வருகை வெறும் 35 சதவீதம் தான். 25 சதவீத எம்.பி.க்களே 90 சதவீதத்துக்கும் அதிகமான நாட்கள் பாராளுமன்றத்துக்கு வருகை புரிந்து உள்ளனர்.

எம்.பி.க்களில் மிகவும் குறைவான நாட்களே பங்கேற்றவர் தற்போது பஞ்சாப் முதல்–மந்திரியாக இருக்கும் அமரீந்தர் சிங். இவருடைய வருகைப்பதிவு 6 சதவீதம் மட்டுமே. நடிகர் சத்ருகன் சின்காவின் வருகை 70 சதவீதமாக இருந்தாலும், அவர் எந்த விவாதத்திலும் பங்கேற்றதில்லை. அதேபோல் எந்த கேள்விகளும் கேட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!