பகட்டுக்கு டாட்டா காட்டும் ஜெட்-இசட் (Gen Z) -ன் புதிய ட்ரெண்ட்!
ஒரு காலத்தில் இளைஞர்கள் என்றாலே பிரம்மாண்டமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், விலை உயர்ந்த சொகுசு விடுதிகள் மற்றும் ‘எலைட்’ என்று சொல்லப்படும் பிரத்யேக கிளப்களைத் தேடித்தான் ஓடுவார்கள் என்ற பிம்பம் இருந்தது. ஆனால், இன்றைய ‘ஜெனரேஷன்-இசட்’ (Gen Z) அந்த பிம்பத்தை உடைத்து எறிந்து கொண்டிருக்கிறது. பகட்டான விளம்பரங்களை விட, எளிமையான மற்றும் நெருக்கமான (Authentic) இடங்களையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். குறிப்பாக, உள்ளூர் உணவகங்கள் மற்றும் சாதாரண ‘டைவ் பார்கள்’ (Dive Bars) எனப்படும் சிறிய மதுக்கூடங்களில் ‘ரெகுலர்’ வாடிக்கையாளர்களாக மாறுவதை அவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.
1. பகட்டான இடங்கள் மீதான அதிருப்தி
இன்றைய இளைஞர்கள் ஏன் ஆடம்பரமான இடங்களைத் தவிர்க்கிறார்கள் என்பதற்குப் பின்னால் பல சமூகக் காரணங்கள் உள்ளன. பல உணவகங்கள் இப்போது ஆன்லைன் முன்பதிவு, நீண்ட வரிசை மற்றும் மிக அதிகக் கட்டணம் எனப் பொதுமக்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இந்த ‘எக்ஸ்ப்ளூசிவிட்டி’ (Exclusivity) கலாச்சாரம் இளைஞர்களுக்குச் சோர்வைத் தருகிறது. இதற்குப் பதிலாக, எப்போது வேண்டுமானாலும் செல்லக்கூடிய, தங்களை அடையாளம் கண்டு வரவேற்கக்கூடிய பக்கத்து வீட்டு உணவகங்களை அவர்கள் நாடுகின்றனர்.

2. ‘டைவ் பார்’ கலாச்சாரம் மற்றும் நம்பகத்தன்மை (Authenticity)
‘டைவ் பார்’ என்பது ஆடம்பர வசதிகள் இல்லாத, மிகவும் பழமையான மற்றும் எளிமையான இடங்களைக் குறிக்கும்.
-
அடையாளம்: அங்குச் சென்றால் உரிமையாளர் பெயர சொல்லி அழைக்கும் நெருக்கம் கிடைக்கிறது.
-
பொருளாதாரம்: விலை குறைவு என்பதையும் தாண்டி, அங்குள்ள நேர்மையான சூழல் (Vibe) அவர்களை ஈர்க்கிறது.
-
சமூக வலைதள தாக்கம்: இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ‘பெர்ஃபெக்ட்’ ஆகக் காட்டிக்கொள்வதை விட, எதார்த்தமான இடங்களைப் புகைப்படம் எடுத்துப் பகிர்வதையே இவர்கள் ‘கூல்’ (Cool) எனக் கருதுகின்றனர்.
3. சிறு வணிகங்களின் விசுவாசமும் டெக் நிறுவனங்களின் லாபமும்
இந்த மாற்றத்தைப் பல சிறு வணிகங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.
-
விசுவாசத் திட்டங்கள் (Loyalty Programs): வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் மற்றும் முன்னுரிமை அளிப்பதன் மூலம் வணிகங்கள் தங்கள் வருவாயை உறுதி செய்கின்றன.
-
தொழில்நுட்பக் கூட்டணி: இதைப் பயன்படுத்திக் கொள்ள ‘டோஸ்ட்’ (Toast), ‘ஸ்கொயர்’ (Square) போன்ற டெக் நிறுவனங்கள் சிறு வணிகங்களுக்குத் தேவையான டிஜிட்டல் லாலிட்டி கார்டுகள் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் கருவிகளை வழங்குகின்றன. இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் எத்தனை முறை வருகிறார், அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை வணிகர்கள் எளிதில் அறிந்து கொள்கின்றனர்.
4. சமூக மாற்றத்தின் வெளிப்பாடு
இது வெறும் ஒரு நுகர்வோர் கலாச்சாரம் மட்டுமல்ல; இது ஒரு சமூக மாற்றத்தின் அறிகுறி.
-
பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை விட, உள்ளூர் வணிகர்களை வளர்ப்பது (Support Local) என்பதில் ஜெட்-இசட் உறுதியாக உள்ளனர்.
-
தனிமை உணர்வைப் போக்க, மனிதத் தொடர்பு அதிகம் உள்ள இடங்களைத் தேடுகிறார்கள்.
ஆக டிஜிட்டல் உலகில் வாழும் இளைஞர்கள், நிஜ உலகில் ஒரு மனிதத் தொடர்பைத் தேடுகிறார்கள் என்பதையே இந்த ‘டைவ் பார்’ மோகம் காட்டுகிறது. பெரிய பிராண்டுகளை விட, விசுவாசமான வாடிக்கையாளர்களை உருவாக்கும் சிறு வணிகங்களே வருங்காலத்தின் வெற்றியாளர்களாக இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.
ரமாபிரபா


